இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்களின் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சராசரியாக 3 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மைல்டு ஹைபிரிட் கார்களான சியாஸ் மற்றும் எர்டிகா போன்றவை விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

மாருதி சுசூகி – ஜிஎஸ்டி விலை

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் காரணமாக பெரிய அளவில் நாட்டின் சந்தையில் மாற்றங்களை பெற்றுள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறையில் சிறிய ரக கார்கள் மற்றும் எஸ்யூவி வரை விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி நிறுவனமான கார் தயாரிப்பாளரான மாருதியின் கார் மற்றும் எஸ்யூவி மாடல்களின்  எக்ஸ்-ஷோரூம் விலையில் 3 சதவீகிதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. மாருதியின் எஸ்ஹெச்விஎஸ் ஹைபிரிட் நுட்பத்தினை பெற்ற டீசல் மாடல்களான சியாஸ் மற்றும் எர்டிகா போன்வற்றின் விலை கனிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாடல்கள் வாரியான விலை குறைகப்பு விபரத்தை விரைவில் மாருதி சுசுகி வெளியிட உள்ளது. நாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒருமுனை வரி விதிப்பின் காரணமாக மோட்டார் துறையில் தற்போது மாற்றங்கள் குறித்தான தெளிவான விபரங்கள் கிடைத்துள்ளது.

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசலுக்கு குறைவான எஞ்சின் சிசி பெற்ற மாடல்கள் மற்றும் 4 மிட்டருக்கு குறைவான கார்களின் எக்ஸ்ஷோரூம் விலையில் 2.25 – 2.50 சதவிகிதம் வரை விலை குறைந்துள்ளது.

1.5 லிட்டருக்கு குறைவான டீசல் அல்லது 1.2 லிட்டருக்கு குறைவான பெட்ரோல் எஞ்சின்  பெற்ற மாடல்கள் விலை 1.7 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.

எஸ்யூவி கார்கள் மற்றும் ஆடம்பர கார்களின் விலையில் 1.7-12 சதவிகதம் வரை சரிவு ஏற்ப்பட்டுள்ளது.

 

மின்சார கார்களின் விலை 7 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் கார்களின் விலை 13.3 சதவிகிதம் வரை உயர்வு ஏற்படும்.

மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரியின் காரணமாக 350சிசி க்குகுறைவான மாடல்களுக்கு அதிகபட்சமாக 2.5- 4% விலை குறையும் வாய்ப்புகள் உள்ளது. 350சிசி க்கு மேற்பட்ட பைக்குகளின் விலையில் 1.5-2.5 % வரை அதிகரிக்கலாம். விலை விபரம் மாற்றங்கள் அனைத்தும் டீலர்கள் மற்றும் மாநில வாரியாக மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.