புதிதாக பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு VX CVT வேரியன்டாக வெளியிடப்பட்டுள்ளது. அமேஸ் VX CVT பெட்ரோல் விலை ரூ.8.56 லட்சம் மற்றும் அமேஸ் VX CVT டீசல் விலை ரூ.9.56 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்பாக  S, V வேரியன்டில் மட்டும் விற்பனைக்கு கிடைத்த சிவிடி தற்போது கூடுதலாக VX வேரியன்டில் வெளிவந்துள்ளது.

ஹோண்டா அமேஸ் சிவிடி

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் எஞ்சின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு எஞ்சின்களும் கிடைக்க உள்ளது.

ஹோண்டா அமேஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.5 கிமீ (மேனுவல்) , 19.0 கிமீ (ஆட்டோமேட்டிக்) மற்றும் அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.8 கிமீ (மேனுவல்) 23.8 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

விஎக்ஸ் வேரியன்டில் இரு வண்ண கலவையில் டிஜிப்பேட் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றது. கடந்த மே மாதம் விற்பனைக்கு வந்த இரண்டாம் தலைமுறை அமேஸ் கார் விற்பனை எண்ணிக்கை 85,000 கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.