எலிவேட் கார் உட்பட 5 எஸ்யூவி கார்களை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் எலிவேட் எலக்ட்ரிக் மாடலும் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டிற்குள் எதிர்பார்க்கலாம்.
2030 ஆம் ஆண்டிற்குள் 5 எஸ்யூவி கார்களை வெளியிடவும் அவற்றில் சில எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களாக இருக்கலாம். இனி வரவுள்ள எஸ்யூவி மாடல்கள் பீரிமியம் சந்தைக்கு ஏற்றதாக இருக்கலாம்.
Honda Elevate EV
ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டக்குயா சுமுரா கூறுகையில், “நாங்கள் இந்தியாவிற்காக மிகவும் வலுவான தயாரிப்புகளை திட்டமிட்டுள்ளோம். 2030 ஆம் ஆண்டிற்குள் ஐந்து எஸ்யூவி மாடல்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவின் மிக கடும் சவால்கள் நிறைந்த சந்தையில் எலிவேட் முக்கிய பங்கு வகிக்கும். எதிர்காலத்தில் ஹோண்டாவின் ஏற்றுமதி மையமாக விளங்கும். ஹோண்டா கார்ஸ் இந்தியா அடுத்த மூன்று ஆண்டுகளில் எலிவேட்டின் மின்சார பதிப்பை சந்தைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
எலிவேட் ஹைபிரிட் மாடலாக விற்பனைக்கு வெளியாகாது எனவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஹைபிரிட் வாகனங்களுக்கு வசூலிக்கப்படுகின்ற வரியின் காரணமாக ஹைபிரிட் தயாரிப்பு திட்டத்தை கைவிட்டுள்ளது.
ஹோண்டா எலிவேட் காருக்கான முன்பதிவு ஜூலை மாதம் துவங்கப்படுவதுடன் விற்பனைக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக எதிர்பார்க்கலாம்.