சமீபத்தில் அமேஸ் செடான் மாடலில் ப்ரீவிலேஜ் எடிசன் மாடலை போலவே ஹோண்டா ஜாஸ் ப்ரீவிலேஜ் எடிசன் ரூ. 7.36 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி ஆப்ஷனல்களில் கிடைக்கின்றது.
ஹோண்டா ஜாஸ் ப்ரீவிலேஜ்
ஹோண்டா ஜாஸ் காரின் ஜாஸ் V வேரியன்ட் மாடலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பிரீவிலேஜ் சிறப்பு பதிப்பு சாதாரண மாடலை விட ரூ. 5000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
வெளி தோற்ற அமைப்பில் ப்ரீவிலேஜ் எடிசன் பேட்ஜ் போன்றவற்றுடன் இன்டிரியர் அமைப்பில் டிஜிபேட் 17.7-cm இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் செயற்கைகோள் தொடர்புடன் கூடிய 3D நேவிகேஷன், 1.5GB சேமிப்பு வசதியுடன் புளூடூத் மற்றும் யூஎஸ்பி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.
எஞ்சினில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஜாஸ் காரில் 90பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 100என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி தானியங்கி கியர்பாக்சிலும் கிடைக்கும்.
ஜாஸ் டீசல் காரில் 100பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 200என்எம் ஆகும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.
ஹோண்டா ஜாஸ் ப்ரீவிலேஜ் விலை பட்டியல்
MT Privilege Edition (Petrol) | ரூ. 7,36,358 |
---|---|
V CVT Privilege Edition (Petrol) | ரூ. 8,42,089 |
V MT Privilege Edition (Diesel) | ரூ. 8,82,302 |
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி )