ஹூண்டாய் இந்தியா நிறுவனம், கிரெட்டா அட்வென்ச்சர் மற்றும் அல்கசார் அட்வென்ச்சர் என இரண்டு அட்வென்ச்சர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய கிரெட்டா அன்வென்ச்சர் எடிசன் விலை ரூ.15.17 லட்சம் முதல் ரூ.17.89 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
7 இருக்கை பெற்ற அல்கசார் அட்வென்ச்சர் எடிசன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டு ரூ.19.03 லட்சம் முதல் துவங்கி ரூ. 21.23 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Hyundai Creta Adventure
கிரெட்டா அட்வென்ச்சரில் 115hp, 144Nm, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது iVT என இரண்டு ஆப்ஷனில் கிடைக்கும். புதிய ரேஞ்சர் காக்கி நிறத்தை பெற்று டேஸ்கேம், கருப்பு நிற 17 அங்குல அலாய், மெடல் பெடல் உட்பட வெளிப்புற தோற்ற அமைப்பில் அட்வென்ச்சர் பேட்ஜிங் பெற்று மிக நேர்த்தியாக கிளாடிங் உள்ளிட்ட சிறிய அளவிலான மாறுதல்களை கொண்டுள்ளது.
இன்டிரியரில் மிக நேர்த்தியாக பல்வேறு இடங்களில் பச்சை நிறம் சேர்க்கப்பட்டு கருமை நிறத்திலான இன்டிரியர் கொடுக்கப்பட்டுள்ளது.
Hyundai Creta Adventure Edition models (all prices, ex-showroom).
Variant name | Price (ex-showroom) |
Creta 1.5 MPI Petrol MT SX | ₹. 15.17,000 |
Creta 1.5 MPI Petrol IVT SX(O) | ₹. 17,89,400 |
Hyundai Alcazar Adventure
6 மற்றும் 7 இருக்கை என இரண்டிலும் வந்துள்ள அல்கசார் 160hp பவர், 253Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது. 6-வேக மேனுவல் அல்லது 7 டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது. பெட்ரோல் என்ஜின் வரும்போது, 115hp, 144Nm, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT என இரண்டு ஆப்ஷனில் கிடைக்கும்.
கிரெட்டா போன்றே அல்கசாரிலும் ரேஞ்சர் காக்கி நிறத்தை பெற்று டேஸ்கேம், கருப்பு நிற 17 அங்குல அலாய், மெடல் பெடல் உட்பட வெளிப்புற தோற்ற அமைப்பில் அட்வென்ச்சர் பேட்ஜிங் பெற்று மிக நேர்த்தியாக கிளாடிங் உள்ளிட்ட மாறுதல்களுடன் இன்டிரியரில் மிக நேர்த்தியாக பல்வேறு இடங்களில் பச்சை நிறம் சேர்க்கப்பட்டு கருமை நிறத்திலான இன்டிரியர் கொடுக்கப்பட்டுள்ளது.
Variant name | Price (ex-showroom) |
Alcazar 1.5 Turbo-Petrol MT Platinum | ₹ 19,03,600 |
Alcazar 1.5 Turbo-Petrol DCT Signature(O) | ₹. 20,63,600 lakh |
Alcazar 1.5 Diesel MT Platinum | ₹. 19,99,800 |
Alcazar 1.5 Diesel MT Signature(O) | ₹ 21,23,500 |