ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மாடலில் கூடுதல் வசதிகள் மற்றும் இரட்டை வண்ண கலவை தோற்றத்தை பெற்ற மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
க்ரெட்டா எஸ்யுவி
- 2015ல் இந்திய சந்தையில் க்ரெட்டா எஸ்யுவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- டாப் SX+ வேரியன்டில் 7 இஞ்ச் அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சேர்க்கப்பட்டுள்ளது.
- புதிய E+ வேரியன்ட் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் கிடைக்கும்.
க்ரெட்டா எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள எஞ்சின் விபரம்…,
120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் டார்க் 155என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 15.29கிமீ ஆகும்.
87 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 220என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.38கிமீ ஆகும்.
125 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 259என்எம் ஆகும் . இதன் மெனுவல் மைலேஜ் லிட்டருக்கு 19.67கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 17.01கிமீ ஆகும்.
புதிய SX+ வேரியன்ட் வசதிகள்
1.6 லிட்டர் டீசல் மாடலில் டூயல் டோன் வண்ணங்களாக வெள்ளை வண்ணத்துடன் கருப்பு மேற்கூறை மற்றும் சிவப்பு நிறுத்துடன் கருப்பு மேற்கூறை என இருவிதமான ஆப்ஷனை பெற்றுள்ள இந்த புதிய எஸ்எக்ஸ் பிளஸ் வகையில் இன்டிரியரில் கருப்பு வண்ணத்துடன் சிவப்பு இன்ஷர்ட்கள் சேர்க்கப்பட்டு கூடுதலாக புதிய 7 இஞ்ச் அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளது.
- SX+ பெட்ரோல் ரூபாய் 12.35 லட்சம்
- SX+ டீசல் ரூபாய் 13.88 லட்சம்
புதிய E+ வேரியன்ட்
1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எக்ஸ்கூட்டிவ் பிளஸ் எனப்படும் E+ மாடலும் க்ரெட்டாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- க்ரெட்டா E+ விலை ரூபாய் 9.99 லட்சம்
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )