குறைந்த விலை கொண்ட தொடக்கநிலை சந்தை மாடலாக விளங்கிய ஹூண்டாய் இயான் கார் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு எட்டு ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைத்து வந்தது. இயான் காருக்கு மாற்றாக புதிய சான்ட்ரோ கார் விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் நீக்கப்பட்டதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் வகையில், தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் இயான் கார் மாடலை நீக்கியுள்ளது.

ஹூண்டாய் இயான் கார் நீக்கம்

8 ஆண்டுகளுக்கு முன்னதாக விற்பனைக்கு வந்த இயான் ஆரம்பத்தில் ஆல்டோ 800 காரை எதிர்கொண்ட நிலையில், பிறகு நானோ மற்றும் க்விட் கார்களுடன் சந்தையில் போட்டியிட்டது. ஆனால் நாள்டைவில் இயான் காருக்கு சந்தை மதிப்பு சரிந்தது.

ஆரம்பத்தில் 814 சிசி என்ஜின் பெற்ற 55 BHP மற்றும் 75 Nm டார்க் கொண்டதாக விளங்கியது. அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் இயான் காரில் மூன்று சிலிண்டர் கொண்ட என்ஜின்  65 BHP பவர் மற்றும் 95 Nm டார்க் கொண்டதாக விளங்கியது.

புத்தம் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கின்றது. இயான் காரை விட சிறந்த மாடலாகவும், அதிக வசதிகள் மற்றும் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது.