2023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2023

ஸ்டைலிஷான தோற்ற மாற்றங்களை பெற்றுள்ள புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த மாடலிலும் டர்போ மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன் நீக்கப்பட உள்ளது.

இந்நிறுவனம் ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் ஐ10 நியோஸ் விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

2023 Hyundai Grand i10 Nios

கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் முன்பக்க பம்பரை மாற்றப்பட்டு கருப்பு நிறத்தில் விரிவாக்கப்பட்ட கிரில்லை கொண்டுள்ளது. கிரில்லின் இரு முனைகளிலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புதிய அம்பு வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் பக்கவாட்டு இன்டேக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில், ஹேட்ச்பேக் 15-இன்ச் அலாய் வீல்களின் புதிய தொகுப்பைப் பெறுகிறது. மற்றபடி பின்புறத்தில் எல்இடி டெயில்-லைட்களைக் கொண்டுள்ளது மற்றும் லைட் பார் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஆறு வண்ண விருப்பங்களை வழங்குகிறது

கேபின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் இல்லாமல் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, தோல் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் ஃபுட்வெல் பகுதியில் புதிய விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆரா ஃபேஸ்லிஃப்ட்டில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பின்புற ஏசி வென்ட்கள், தானியங்கி ஏசி கட்டுப்பாடு மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றுடன் 8.0 இன்ச் தொடுதிரையை பெற்றுள்ளது.  புதிய டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் புதிய 3.5-இன்ச் உள்ளிட்ட கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களையும் பெறுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளே பெற்றுள்ளது.

இப்போது நான்கு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி ஆகியவற்றுடன் ஆப்ஷனல் வேரியண்டில் ஆறு ஏர்பேக்குகள், இஎஸ்சி மற்றும் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகியவை விருப்பமான பாதுகாப்பு அம்சங்களாகும். இது சென்ட்ரல் லாக்கிங் மற்றும் கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஐஎஸ்ஓஃபிக்ஸ்  மற்றும் பகல்/இரவு நேர ரியர் வியூ மிரர் ஆகியவற்றை பெறுகிறது.

2023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113.8 என்எம் டார்க்கை வழங்குகின்றது. இதில் 5 வேக MT மற்றும் AMT ஆகிய இரண்டு விருப்பங்களிலும் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் 69 PS மற்றும் 95.2 Nm டார்க்கை வெளிப்படுத்துகின்றது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கிறது.

Share