ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கிராண்ட் i10 நியோஸ் கார்ப்பரேட் வேரியண்டின் ஆரம்ப விலை ₹6.93 லட்சத்தில் துவங்குகின்றது. சந்தையில் விற்பனையில் உள்ள மாடலின் அடிப்படையில் வந்துள்ளது.
இந்த கார்ப்பரேட் எடிஷன் ஆனது கூடுதலாக சில மாற்றங்களை டிசைனில் மட்டும் உள்ளது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இந்த மாடலில் இடம்பெறவில்லை.
கிராண்ட் ஐ10 நியாஸ் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கின்றது. தற்பொழுது வந்துள்ள கார்ப்பரேட் எடிசன் ஆனது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர் பாக்ஸ் என இரண்டு ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
Corporate Variant |
Price |
1.2l Kappa Petrol with 5 MT |
₹ 6 93 200 |
1.2l Kappa Petrol with Smart Auto AMT |
₹ 7 57 900 |
கார்ப்பரேட் எடிசன் மாடலுக்கு R15 டூயல் டோன் ஸ்டீல் வீல் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது கூடுதலாக கருப்பு நிற ரேடியேட்டர் கிரில் பாடி நிறத்திலான ORVM மற்றும் கதவு கைப்பிடிகள், எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி டையில் லேம்ப் கொண்டுள்ளது.
இரு வண்ண கலவையிலான கிரே நிறத்திலான இன்டீரியர் ஐ கொண்டுள்ள இந்த மாடலில் 17.14 செமீ தொடுதிரை இன்ஃபோடெயின்ம்மென்ட் சிஸ்டம், புளூடூத் இணைப்பு, ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடுகள், ஓட்டுனர் இருக்கை அட்ஜஸ்ட்மென்ட், ஃபுட்வேல் லைட்டிங் மற்றும் பேசஞ்சர் சீட் பேக் பாக்கெட், USB சாக்கெட் போன்றவை எல்லாம் இருக்கின்றன.
அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், சீட்-பெல்ட் ரிமைன்டர் & 3 புள்ளி இருக்கை பெல்ட்கள் ஆனது அனைத்து இருக்கைகளுக்கும், பகல் மற்றும் இரவு இன்சைட் ரியர்-வியூ மிரர் (IRVM), EBD உடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் சென்டரல் டோர் லாக்கிங் கூடுதலாக பல்வேறு அடிப்படையான அம்சங்கள் உள்ளன.
4 லட்சத்திற்கும் அதிகமான மகிழ்ச்சியான குடும்பங்களை பெற்றுள்ள வெற்றிகரமான Grand i10 NIOS மாடலில் சிறப்பு கார்ப்பரேட் எடிசனின் கூடுதலான வசதிகள் மூலம் இந்திய இளைஞர்களுக்கு, குறிப்பாக முதல் முறையாக வாங்குபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும் என ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் சிஓஓ திரு தருண் கர்க் கருத்து தெரிவித்துள்ளார்.