Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹூண்டாய் iMT என்றால் என்ன ? வென்யூ காரில் அறிமுகம்

by automobiletamilan
July 3, 2020
in கார் செய்திகள்
Hyundai Venue iMT gearbox
Hyundai Venue iMT

ஹூண்டாய் நிறுவனம் கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவலாக கியர் மாற்றும் முறைக்கான நுட்பத்தை iMT (Intelligent Manual Transmission) என்ற பெயரில் அறிமுகப்படுத்த உள்ளது. முதன்முதலாக ஐ.எம்.டி நுட்பத்தை வென்யூ எஸ்யூவி காரின் 1.0 லிட்டர் T-GDi பெட்ரோல் என்ஜினில் 6 வேக ஐஎம்டி பெற உள்ளது.

கியா நிறுவனம் 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி மாடலாக தயாரித்து வரும் சோனெட் எஸ்யூவி காரில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த ஐஎம்டி நுட்பம், முதன்முறையாக வென்யூ காரில் இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐஎம்டி கியர்பாக்ஸ் எவ்வாறு ஆட்டோமேட்டிக் மற்றும் ஏஎம்டி கியர்பாக்சிலிருந்து மாறுபடுகின்றது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் iMT என்றால் என்ன ?

இன்டெலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என அழைக்கப்படுகின்ற ஐஎம்டி கியர்பாக்ஸ் கிளட்ச் இல்லாமல் கியரை இலகுவாக ஷிஃப்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த காரில் இரண்டு பெடல்கள் மட்டுமே அமைந்திருக்கும். முழுமையான ஆட்டோமேட்டிக், சிவிடி போன்று ஐஎம்டி கியர்பாக்ஸ் முழுமையான ஆட்டோமேட்டிக் இல்லை. ஆனால் கிளட்ச் பெடலின் வேலையை டிரைவர் மூலம் மேற்கொள்ளாமல் தானியங்கி முறையில் கியர் ஷிஃப்ட் செய்யலாம். இதுவும் ஏஎம்டி கியர்பாக்ஸ் போன்றுதான், ஆனால் தொழில்நுட்ப ரீதியாக இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. பொதுவாக ஏஎம்டி மாடலில் மென்பொருள் கியரினை தேர்வு செய்யும் ஆனால் ஐஎம்டி கியர்பாக்சில் நாம் மேனுவலாக கியரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த காரில் வழக்கம் போலவே ‘H’ வடிவில் கியர் பேட்டர்ன் மேனுவல் மாடலை போன்றே அமைந்திருக்கும். ஆனால் கிளட்ச் பெடல் தானாகவே உள்ளுக்குள் டிரைவரின் உதவியில்லாமல் இயங்கிக் கொள்ளும்.

intelligent Manual Transmission
hyundai intelligent Manual Transmission

ஹூண்டாய் நிறுவனத்தால் Transmission Gear Shift என அழைக்கப்படுகின்ற நுட்பத்தில் கியர் லிவர் மேல் ஓட்டுநர் கை வைத்த நொடியே இதில் பொருத்தப்பட்டுள்ள Intention Sensor மூலமாக சிக்னல் டிரான்ஸ்மிஷன் கட்டுப்பாடு மையத்திற்கு கியர் மாற்றப்படும் வாய்ப்புள்ளதை உணர்ந்து hydraulic actuator மூலமாக தானாக கிளட்ச்சை இயக்கி, கியரை மாற்ற உதவும். இதற்கு Concentric Slave Cylinder (CSC) எனப்படுவது கொடுக்கப்பட்டு கிளட்சினை என்கேஜ் மற்றும் டிஸ்என்கேஜ் செய்ய உதவுகின்றது. இந்த நுட்பம் நெரிசல் உள்ள போக்குவரத்து சாலைகளில் ஓட்டுநரின் பளுவை பெருமளவு குறைக்கும்.

ஏஎம்டி மற்றும் ஐஎம்டி வித்தியாசம் என்ன ?

ஹூண்டாய் ஐஎம்டி கியர்பாக்சில் மென்பொருள் மற்றும் ஏக்சுவேட்டர்கள் கிளட்சினை கட்டுப்படுத்தும். ஆனால் எந்த கியரில் பயணிக்க வேண்டும் என்பதனை நாம் தேர்வு செய்யலாம்.

ஏஎம்டி கியர்பாக்சில் ஏக்சுவேட்டர், மோட்டார்ஸ் மற்றும் மென்பொருள் உட்பட உங்கள் கிளட்சினை கட்டுப்படுத்துவதுடன் , மென்பொருள்தான் நீங்கள் பயணிக்கும் கியரினை தேர்வு செய்யும்.

ஏறக்குறைய ஏ.எம்.டி கியர்பாக்ஸ் மாடல்களும் இயங்குவது இவ்வாறு தான், ஆனால் கியர் ஷிஃப்ட் அனுபவத்தை வழங்காது. ஆனால் ஹூண்டாய் ஐஎம்டி கியர் ஷிஃப்ட் அனுபவத்தை கிளட்ச் பெடல் இல்லாமல் வழங்குகின்றது.

ஹூண்டாய் வென்யூ ஐஎம்டி
ஹூண்டாய் வென்யூ ஐஎம்டி

ஹூண்டாய் வென்யூ ஐஎம்டி  அறிமுகம் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எஸ். கிம் கூறுகையில், “ஹூண்டாய் நிறுவனம் புதிய மற்றும் புதுமுறை தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கு உந்துதல் அளித்து வருகிறது. எங்கள் ‘எதிர்கால’ வணிக நோக்கத்தின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பம் என்ன என்பதைப் பற்றிய நமது உள்ளார்ந்த புரிதலை மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் வழங்கும் முயற்சியால் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

Tags: Hyundai Venueஹூண்டாய் வென்யூ
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version