17,000 புக்கிங் பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விபரம்

hyundai venue
 

கடந்த 21 ஆம் தேதி வெளியிடப்பட்ட வென்யூ கார் முன்பதிவு எண்ணிக்கை 17,000 கடந்துள்ளது. விற்பனைக்கு முன்பாக 15,000 எண்ணிக்கையாக இருந்தது. வென்யூ எஸ்யூவிக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளில் 2,000 முன்பதிவுகளுடன் மொத்தம் 15,000 புக்கிங் பெற்றுள்ள இந்த காருக்கு 50,000 மேற்பட்ட நபர்கள் கார் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துள்ளனர் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஹூண்டாயின் இந்தியாவின் முதல் ‘Connected Car’ என அழைக்கப்படுகின்ற இந்த எஸ்யூவி காரில் ப்ளூலிங்க் டெக்னாலாஜி வழங்கப்பட்டு 33 வகையான டெக் அம்சத்தை பெற்றுள்ளது.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி

வென்யூவில் 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை கொண்டுள்ளது.

மூன்றாவதாக 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது.

Hyundai venue interior
Hyundai venue interior

வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்)

வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்)

வென்யூ 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.70 கிமீ (மேனுவல்)

விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி உட்பட சந்தையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்கள் சந்தையை பகிர்ந்து கொள்கின்றன.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை பட்டியல்

ஹூண்டாய் வென்யூESSXSX (O)
1.2 Kappa Petrolரூ. 6.50 லட்சம்ரூ. 7.20 லட்சம்
1.0 Turbo Petrolரூ. 8.21 லட்சம்ரூ. 9.54லட்சம்ரூ. 10.60 லட்சம்
1.0 Turbo Petrol Autoரூ. 9.35 லட்சம்ரூ. 11.10 லட்சம்
1.4 U2 Dieselரூ. 7.75 லட்சம்ரூ. 8.45 லட்சம்ரூ. 9.78 லட்சம்ரூ. 10.84 லட்சம்
Hyundai venue SUV officially revealed
Hyundai venue SUV officially revealed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *