மே மாதம் 21 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காருக்கான முன்பதிவு டீலர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் தற்போது நடந்து வருகின்றது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. நான்கு மீட்டருக்கு குறைந்த நீளத்தில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற கார்களை எதிர்கொள்ள உள்ளது.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி சிறப்புகள்

புதிய 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது.

இந்த காரில் இடம்பெற்றுள்ள 33 வகையான ஸ்மார்ட் வசதிகளை கொண்ட ப்ளூலிங்க் டெக்னாலாஜி நுட்பத்தை பெற்றதாக அமைந்துள்ளது. ஹூண்டாய் வென்யூ எஸ்யூவிக்கு விலை ரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் விலைக்குள் அமைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.