ஹூண்டாய் நிறுவனம், மிகவும் நவீன வசதிகளை உள்ளடக்கிய முதல் வெனியூ எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எஸ்யூவியின் முக்கிய படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்துள்ளது.
தற்போது கசிந்துள்ள இந்த படத்தின் மூலம் வெனியூ SX வேரியன்டில் 1.0 லிட்டர் டர்போ என்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றதாக இருக்கும். மேலும் இந்த காரில் 33 ஸ்மார்ட் டெக் வசதிகள் இடம் பெற்றுள்ளன.
வெனியூ எஸ்யூவி புகைப்படம் கசிந்தது
முன்பாக QXi என அறியப்பட்ட இந்த வெனியூவில் இசிம் கார்டு , வாகனத்தினை நிகழ் நேர டிராக்கிங், அவசர கால உதவி சேவை, வாகனத்தின் பராமரிப்பு சார்ந்த மேலான்மை உட்பட பல்வேறு வசதிகளை பெற்ற ஹூண்டாய் புளூலிங்க் டெக்னாலாஜி அம்சத்தை பெற்றிருக்கும்.
முகப்பு தோற்ற அமைப்பில் அற்புதமான கிரில் அமைப்பின் மத்தியில் ஹூண்டாய் லோகோ , ரன்னிங் எல்இடி விளக்கிற்கு மத்தியில் அமைந்துள்ள புராஜெக்ட்ர ஹெட்லைட், ஸ்கிட் பிளேட் என பல்வேறு அம்சங்களை கொண்டு ஸ்டைலிஷாக காட்சியளிக்கின்றது.
பக்கவாட்டில் வெளிவந்துள்ள படங்களின் மூலம் க்ரெட்டா மாடலில் உள்ளதை போன்ற ஸ்டைலிஷான டைமன்ட் கட் அலாய் வீல், பின்புறத்தில் தோற்ற அமைப்பில் ஹூண்டாயின் லோகோவுக்கு கீழ் வெனியூ பேட்ஜ் பெற்றுள்ளது.
இன்டிரியர் படங்களில் மிகவும் அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சென்ட்ரல் கன்சோலில் மிதக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று ஸ்போக்குகளை கொண்ட லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயிரிங் வீல், ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கின்றது.
இந்த மாடலில் 100 HP மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் அடுத்த பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினை பெற்றிருக்கும்.
மேலும் வாசிக்க – 33 ஸ்மார்ட் டெக் வசதிகளை பெற்ற எஸ்யூவி வென்யூ