Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஒரே நாளில் 2000 புக்கிங் அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி

by automobiletamilan
May 3, 2019
in கார் செய்திகள்

4 மீட்டருக்கு குறைவான நீளத்தை கொண்ட ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காரின் புக்கிங் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், முதல் நாளில் மட்டும் 2000 கார்களுக்கு புக்கிங் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் பல்வேறு ஸ்மார்ட் டெக் வசதிகளை பெற்ற முதல் எஸ்யூவி மாடலாக வரவுள்ளது.

நேற்று முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக இந்த எஸ்யூவி காருக்கு ரூபாய் 21,000 புக்கிங் கட்டணத்துடன் முன்பதிவு துவங்கியது. இந்நிலையில் நாடு முழுவதும் சுமார் 2000 கார்களுக்கு ஒரே நாளில் முன்பதிவு நடைபெற்றுள்ளது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விபரம்

120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் S, SX+ என இரு வேரியன்டுடன்  மற்றும் S, SX,SX டூயல் டோன், SX (O) வேரியன்டுகள் உடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

E, S, என இரு வேரியன்டில் மட்டும் ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

E, S, SX,SX டூயல் டோன், மற்றும் SX (O) போன்ற வேரியன்டுகளில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது.

Blue Link connectivity 7 வசதிகள்

1 . செயற்கை அறிவுத்தின் (Artificial Intelligence)

2.  அலர்ட் சேவைகள் (Alert services)

3. இருப்பிடம் சார்ந்த தகவல்கள் (Location-based services)

4. வாகனத்தின் மேலான்மை அம்சங்கள் (Vehicle Relationship Management)

5. ரிமோட் (Remote)

6. காரின் பாதுகாப்பிற்கான (Security)

7. பாதுகாப்பு வசதிகள் (Safety)

இந்த எஸ்யூவி காரில் மேலே வழங்கப்பட்டுள்ள டெக்னாலாஜி சார்ந்த இந்த வசதிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. ஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் எஸ்யூவி, பிரபலமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களை எதிர்கொள்ளுகின்ற இந்த காரின் அறிமுகம் மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Tags: Hyundaiஹூண்டாய்
Previous Post

ரூ.8.50 லட்சத்தில் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்

Next Post

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S பைக்கின் 5 முக்கிய அம்சங்கள்

Next Post

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S பைக்கின் 5 முக்கிய அம்சங்கள்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version