Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ. 6.50 லட்சத்தில் ஹூண்டாய் வெளியிட்ட புதிய வென்யூ எஸ்யூவி சிறப்புகள்

by automobiletamilan
May 21, 2019
in கார் செய்திகள்

hyundai venue launched

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், வெளியிட்டுள்ள புதிய வென்யூ எஸ்யூவி (Hyundai Venue) காரின் விலை 6.50 ரூபாய் லட்சம் முதல் தொடங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்றது.

10 விதமான நிறங்கள், 33 வகையான ப்ளூலிங்க் டெக்னாலாஜி வசதிகள், இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன் போட்டியாளர்களை விட குறைவான விலை, மூன்று வருட வாரண்டி அல்லது வரம்பற்ற கிமீ மற்றும் மூன்று வருட ரோடு அசிஸ்டென்ஸ் போன்ற காரணங்களால் கவனத்தை பெற்றுள்ளது.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி

புதிய 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இந்த என்ஜின் மட்டும் பெற்றுள்ளது.

வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் லிட்டருக்கு 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

இரண்டாவதாக உள்ள பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்துகிறது. வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்)

ஒரு வென்யூ டீசல் என்ஜின் தேர்வினை மட்டும் வழங்குகின்றது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது. இந்த என்ஜினில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. வென்யூ 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.70 கிமீ (மேனுவல்)

ஹூண்டாயின் ப்ளூலிங்க் நுட்பம்

1 . செயற்கை அறிவுத்தின் (Artificial Intelligence)

2.  அலர்ட் சேவைகள் (Alert services)

3. இருப்பிடம் சார்ந்த தகவல்கள் (Location-based services)

4. வாகனத்தின் மேலான்மை அம்சங்கள் (Vehicle Relationship Management)

5. ரிமோட் (Remote)

6. காரின் பாதுகாப்பிற்கான (Security)

7. பாதுகாப்பு வசதிகள் (Safety)

முழுமையாக அறிய – 33 வகையான ப்ளூலிங்க் நுட்பம் ஸ்மார்ட் டெக் வசதிகள்முதல் மூன்று வருடங்களுக்கு ஹூண்டாய் இலவசமாக இந்த நுட்பத்தை வழங்குகின்றது.

வென்யூ எஸ்யூவி

ஹூண்டாயின் வெனியூ எஸ்யூவியில் பாதுகாப்பு சார்ந்த  ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி, ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு இருக்கைகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹீல் ஹோல்ட் அசிஸ்ட், ரியர் கேமரா உடன் ரியர் பார்க்கிங் சென்சார்,  போன்றவற்றை பெற்றதாக அமைந்துள்ளது.

இன்டிரியரில் மூன்று விதமான நிற மாறுபாட்டை கொண்டிருக்கின்றது.மிகவும் தாராளமான இடவசதியை வழங்கும் நோக்கில் 2500 mm வீல்பேஸ் கொண்டதாக அமைந்திருக்கின்றது. இந்த காரின் நீளம் 3995 mm , அகலம் 1770 mm மற்றும் உயரம் 1590 mm ஆகும்.

வென்யூ எஸ்யூவி

புதிதாக அறிமுகமான இந்த காருக்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் எஸ்யூவி, பிரபலமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை பட்டியல்

பெட்ரோல்
Hyundai Venue 1.2 Kappa E MT- ரூ. 6.50 லட்சம்
Hyundai Venue 1.2 Kappa S MT – ரூ. 7.20 லட்சம்
Hyundai Venue 1.0 GDI S MT- ரூ. 8.21 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX MT- ரூ. 9.54 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX (O) MT- ரூ. 10.60 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX DCT- ரூ. 9.35 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX+ DCT- ரூ. 11.10 லட்சம்

டீசல்
Hyundai Venue 1.4 CRDI E MT- ரூ. 7.75 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI S MT- ரூ. 8.45 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI SX MT- ரூ. 9.78 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI SX (O) MT- ரூ. 10.80 லட்சம்

வெனியூ எஸ்யூவி விலை பட்டியல்

 

Hyundai venue SUV officially revealed

 

Tags: Hyundai Venueஹூண்டாய் வெனியூஹூண்டாய் வென்யூ
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version