Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இசுசூ MU-X எஸ்யூவி மே 11ல் அறிமுகம்

by MR.Durai
8 May 2017, 10:07 am
in Car News
0
ShareTweetSend

வருகின்ற மே 11ந் தேதி இந்தியாவில் பிரிமியம் ரக எஸ்யூவி மாடலான இசுசூ MU-X எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகப்படுத்த இசுசூ மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலே எம்யூ-எக்ஸ் வடிவமைக்கப்பட உள்ளது.

இசுசூ MU-X எஸ்யூவி

ஃபார்ச்சூனர் மற்றும் என்டேவர் போன்ற பிரிமியம் எஸ்யூவி மாடல்களுக்கு சவாலாக விளங்கும் வகையிலான எஸ்யூவி காராக களமிறங்க உள்ள இசுசூ எம்யூ-எக்ஸ் மாடலானது, விற்பனையில் உள்ள டி-மேக்ஸ் பிக்கப் மற்றும் செவர்லே நிறுவனத்தின் ட்ரெயில் பிளேசர் எஸ்யூவி போன்ற மாடல்கள் வடிவமைக்கப்பட்ட தளத்தை அடிப்படையாக கொண்டதாகும்.

விற்பனைக்கு வரவுள்ள இந்த மாடலில் முதற்கட்டமாக ஆல்வீல் டிலைவ் வசதியுடன் கூடிய 161 ஹெச்பி பவருடன், 360 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் வகையிலான 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

கூர்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும் புராஜெக்டர் முன் விளக்குகளுடன் கூடிய முகப்பு தோற்றத்தில் இரட்டை ஸ்லாட் கொண்டு க்ரோம் பட்டை பதிக்கப்பட்ட பனி விளக்கு  அறை கிரில் அமைப்பு போன்றவை மிக கம்பீரமான தோற்றத்தை பெற வழிவகுக்கின்றது.

பக்கவாட்டில் 17 அங்குல டைமன்ட்கட் அலாய் வீல் போன்றவற்றுடன் . நேர்த்தியான டெயில் விளக்கு கொண்டு விளங்குகின்ற இசுசூ MU-X இன்டிரியரில் 7 இருக்கை வசதியுடன் கூடிய கேபினுடன் டேஸ்போர்டில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்றவற்றுடன் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், இபிடி, ஏர்பேக் போன்றவை பெற்றதாக விளங்கும்.

ஃபார்ச்சூனர், என்டேவர், பஜெரோ, சான்டாஃபீ ரெக்ஸ்டான் வரவுள்ள டிகுவான் போன்ற எஸ்யூவிகளுக்கு போட்டியிட உள்ள இசுசூ MU-X விலை ரூ. 26 லட்சத்தில் தொடங்கலாம்.

இசுசூ MU-X குறிப்புகள்
  • 3.0 லிட்டர் எஞ்சினை பெற்ற மாடலாக இசுசூ MU-X அறிமுகம் செய்யப்படும்.
  • 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும்.
  • 4×4 டிரைவ் மற்றும் 4×2 என இருவிதமான டிரைவ்களிலும் விற்பனைக்கு வரலாம்.
Tags: Isuzu
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version