ஜாகுவார் நிறுவனத்தின் எஸ்யூவி ரக மாடல் பேஸ் வரிசையில் புதிதாக F-Pace எஸ்யூவி மாடலின் அடிப்படையில் உருவான E-Pace எஸ்யூவி டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இ-பேஸ் ஜூலை 13ந் தேதி சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

E-Pace எஸ்யூவி டீசர் படம் வெளியானது

டாடா குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின்  F-Pace எஸ்யூவி வெற்றியை தொடர்ந்து வரவுள்ள மினி எஸ்யூவி மாடலான  E-Pace எஸ்யூவி காரின் வடிவ தாத்பரியங்கள் முந்தைய மாடலில் இருந்தே பெற்றுள்ளது.

தோற்ற அமைப்பில் எஃப் பேஸ் காரின் வடிவ அம்சத்தை பெற்றதாக வரவுள்ள இந்த மாடல் குறைந்த நீளத்துடன் சிறப்பான பல வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. இன்டிரியர் அமைப்பில் ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் எஃப் பேஸ் போன்றவற்றின் தாத்பரியங்களை பெற்றதாகவே விளங்கும்.

சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மாடலின் முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வருகின்ற ஜூலை 13 ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள இ-பேஸ் மாடலானது 2018 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு செல்ல உள்ளது. இந்தியா வருகை குறித்து எவ்விதமான அதிகார்வப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை