ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான ஐ-பேஸ் காருக்கான முன்பதிவை துவங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிடப்பட்டு மார்ச் 2021-ல் விநியோக்கிக்கப்பட உள்ளது.

மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு மற்ற ஜாகுவார் காரின் பானெட் அமைப்பிலிருந்து மாறுபட்ட மிக நேர்த்தியாக தட்டையான எல்இடி ஹெட்லைட் , டர்ன் இன்டிகேட்டருடன் கூடிய ஓஆர்விஎம், 19 அங்குல அலாய் வீல், இன்கன்ட்ரோல் கனெகட்டிவிட்டி வசதிகளை பெற்றுள்ளது.

ஜாகுவார் இந்தியாவில் ஐ-பேஸ் எஸ்யூவியின் S, SE மற்றும் HSE மூன்று வகைகளை வழங்குகிறது. அனைத்து வேரியண்டிலும் 90kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் இரண்டு மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 400 ஹெச்பி பவரை, 696 Nm டார்க் உருவாக்குகிறது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.8 விநாடிகள் எடுத்துக் கொள்ளும். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 100kW ரேபிட் சார்ஜரில் 0-80 சதவீதம் எட்டுவதற்கு 45 நிமிடங்களும், 7Kw ஏசி வால் சார்ஜரில் 10 மணி நேரம் ஆகும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 470 கிமீ கிடைக்கும் என WLTP மதிப்பிட்டுள்ளது.

ஐ-பேஸ் காரினை முன்பதிவு செய்பவர்களுக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கிமீ உத்தரவாதத்துடன் வருகிறது. கூடுதலாக, ஐ-பேஸ் வாடிக்கையாளர்களுக்கு 5 வருட சர்வீஸ், 5 வருட ஜாகுவார் சாலையோர உதவி மற்றும் 7.4 kW AC சார்ஜர் ஆகியவற்றை வழங்குகின்றது.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஐ-பேஸ் காருக்கு போட்டியாக மெர்சிடிஸ் பென்ஸ் EQC  மற்றும் ஆடி E-Tron போன்றவை சவாலாக அமைந்திருக்கும்.

web title : Jaguar I-Pace Bookings Open In India