பாரத் ஸ்டேஜ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்ட ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி ரக மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. தற்போது தனது இணையத்தில் விபரங்களை ஜீப் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற 2.0 லிட்டர் மல்டிஜெட் II டர்போ சார்ஜ்டு டீசல் என்ஜினை பெற்றிருக்கின்றது. இந்த காரில் 17 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டு அனைத்து சாலைகளிலும் பயணிகும் திறனை பெற்ற டயர் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக்
விற்பனையில் உள்ள ஜீப் நிறுவன காம்பஸ் எஸ்யூவியை அடிப்படையாக கொண்ட ட்ரெயில்ஹாக் வெர்ஷன் மாடல் 4×4 ஆல் வீல் டிரைவ் வசதியுடன் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ள டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
2.0 லிட்டர் மல்டிஜெட் II டீசல் டர்போ சார்ஜ்டு டீசல் என்ஜின் பெற்று விற்பனை செய்ய உள்ளது. BS-VI எமிஷன் விதிகளளுக்கு உட்பட்ட என்ஜின் 170 hp பவர் மற்றும் 350 Nm டார்க் கொண்டதாக இருக்கும். இதில் ஏக்டிவ் டிரைவ் லோ 4×4 ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கூடியதாகவும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது. இந்த காரில் 5 விதமான டிரைவ் மோட்கள் இடம்பெற்றுள்ளன. அவை ஸ்னோ, ஸ்போர்ட், மட்,சேன்ட் மற்றும் ஆட்டோ போன்றவையாகும்.
பிரத்தியோகமான வசதிகளுடன் தனித்துவமான பம்பர்கள், ரெட் டோவ் ஹூக்கள், பனி கால லைட்கள், முன்புறத்தில் சுற்றிலும் கிரில்கள், மிரர்கள், ரூப் ரெயில் மற்றும் விண்டோ, டிரையல் ரேட்டட் பேட்ஜ்களுடன் பெண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ரூ.27 லட்சம் விலையில் ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.