ரூ.60 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற கியா EV6 எலக்ட்ரிக் காருக்கு முன்பதிவு தொகையான ரூ. 3 லட்சம், இந்திய சந்தைக்கு 100 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் 2 ஆம் தேதி விற்பனைக்கு வரக்கூடும்.

கியா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியான EV6 மாடலுக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியுள்ளது. இந்திய சந்தையில் 100 யூனிட் கார்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் மற்றும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவு செய்யப்படும்.

மின்சார காரை 12 நகரங்களில் கியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 டீலர்ஷிப்கள் மூலம் 3 லட்சம் செலுத்தி வாடிக்கையாளர்கள் EV6 க்கான ஆர்டர் செய்ய www.kia.com/in/ என்ற இணைப்பைப் பயன்படுத்தி கியா இந்தியா இணையதளத்தில் உள்நுழையலாம்.

EV6 இன் அதிகபட்ச வரம்பு 528 கிமீ (WLTP) அதாவது நிகழ்நேரத்தில் 400 கிமீக்கு மேல் எளிதாக இருக்க வேண்டும். கியா இந்த காரில் 2 பேட்டரி பேக்குகளை வழங்குகிறது. 77.4 kWh மற்றும் 58 kWh யூனிட் ஆகும்.

வெறும் 18 நிமிடங்களில் கியா EV6 காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று கியா கூறுகிறது. ஆனால், இதற்க்கு 350 kW வேகமான சார்ஜர் மூலம் மட்டுமே அடைய முடியும். சாதாரண 50 கிலோவாட் சார்ஜரில், காரை 73 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

ஒற்றை மோட்டார் 229 PS மற்றும் 350 Nm வெளியிடுகிறது, டூயல்-மோட்டரின் ஒருங்கிணைந்த வெளியீடு 325 PS மற்றும் 605 Nm ஆகும். மின்சார கார் 3.5 வினாடிகளில் 0-100 கிமீ எட்டும் எனவே, நாட்டின் அதிவேக EVகளில் ஒன்றாகும்.