Categories: Car News

சொனெட், செல்டோசில் புதிய GTX வேரியண்டை அறிமுகம் செய்த கியா

கியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செல்டோஸ் எஸ்யூவி மற்றும் சொனெட் என இரு மாடலிலும் GTX என்ற வேரியண்ட்டை கூடுதலாக வெளியிடப்பட்டு வசதிகள் மற்றும் சில வேரியண்டுகளில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

செல்டோஸ் GTX

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்ற செல்டோஸ் GTX வேரியண்டில், 18-இன்ச் அலாய் வீல், டூயல் எக்ஸாஸ்ட் டர்போ பெட்ரோலில் மட்டும், கருப்பு நிறத்திலான உட்புறம், டூயல் ஜோன் ஏசி கட்டுப்பாடு, காற்றோட்டமான முன்புற இருக்கைகள் Level 2 ADAS, 360-டிகிரி கேமரா, டூயல் டிஸ்பிளேவுடன் கூடிய 10.25-இன்ச் தொடுதிரை வழங்குகின்றது.

கியா செல்டோஸ் GTX வேரியண்ட் விலை ரூ.18.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

2024 கியா செல்டோஸ்

சொனெட் GTX

சொனெட்டில் உள்ள GTX வேரியண்டில் 16-இன்ச் அலாய் வீல், எல்இடி மூடுபனி விளக்குகள், முழு-கருப்பு நிற இன்டிரியர், 360-டிகிரி கேமராக்கள், இயங்கும் டிரைவர் இருக்கை, இரட்டை 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், கீ-லெஸ் என்ட்ரி அண்ட் கோ, காற்றோட்டமான முன் இருக்கைகள் உள்ளன. GTX+ மாடலில் Bose ஆடியோ சிஸ்டம், சுற்றுப்புற LED ஒலி விளக்குகள் மற்றும் ADAS செயல்பாடுகளைச் சேர்க்கிறது.

கியா சொனெட் GTX வேரியண்ட் விலை ரூ.13.71 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

கூடுதலாக இரண்டின் X-line வேரியண்டுகளில் கருப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

16 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

21 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago