Categories: Car News

இந்தியாவில் ₹ 8.89 கோடியில் லம்போர்கினி ரிவோல்டோ அறிமுகம்

Revuelto

ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் ரிவோல்டோ சூப்பர் கார் விற்பனைக்கு ரூ.8.89 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

இந்திய சந்தையில் முதல் மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் டெலிவரி வழங்கப்பட உள்ளதாக லம்போர்கினி குறிப்பிட்டுள்ளது.

Lamborghini Revuelto

லம்போர்கினி ரிவோல்டோ சூப்பர் காரில் உள்ள 6.5-லிட்டர் L545 V12 என்ஜின் உடன் மூன்று எலக்ட்ரிக் மோட்டாருடன் 3.8kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 825hp பவர் மற்றும் 725Nm டார்க் வெளிப்படுத்துடன் கூடுதலாக உள்ள 148 bhp பவர், பின் எஞ்சின் 295 bhp பவரை வழங்குவதுடன் மொத்தமாக 1,015hp பவர் மற்றும் 807Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் பவர் நான்கு சக்கரங்களுக்கும் வழங்கப்படுகிறது. ரிவோல்டோ மாடல் 2.5 வினாடிகளில் 0-100 kmph வேகத்தை எட்டும் மற்றும் டாப் ஸ்பீடு 350 kmph ஆகும்.

லம்போர்கினி Revuelto சூப்பர் கார் 2026 வரை விற்றுத் தீர்ந்துவிட்டதாக லம்போர்கினி அறிவித்தது. அதேநேரம், இந்தியப் பிரிவுக்கு சில மாடல்களை ஒதுக்கியுள்ளது.

Recent Posts

ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ…

2 days ago

புதிய வேரியண்ட் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் டைகனில் அறிமுகமானது

ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை செய்து வருகின்ற டைகன் மற்றும் விர்டஸ் எ இரு மாடல்களிலும் தொடர்ந்து பல்வேறு கூடுதல் வசதிகள்…

2 days ago

2024 நிசான் மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta,…

3 days ago

இந்தியாவில் ரூ.9.25 லட்சத்தில் சுசூகி GSX-8R விற்பனைக்கு வெளியானது

ஃபேரிங் ஸ்டைலை பெற்ற சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் GSX-8R ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின்…

3 days ago

ரூ.20,000 வரை டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தள்ளுபடி..!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 2.2…

3 days ago

பிரபலமான ‘Punch’ கேமோ எடிசனை டாடா மோட்டார்ஸ்

பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திஃ பிரசத்தி பெற்ற 'Punch' எஸ்யூவி மாடலில் கேமோ எடிசனை மற்ற மாடல்களை…

3 days ago