2021-ல் Laureti DionX எலக்ட்ரிக் எஸ்யூவி புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்ய லாருட்டி மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. லாருட்டி
கார் ஆலையை தொடங்க ரூ.2,577 கோடி முதலீட்டை புதுவையில் மேற்கொள்கிறது.
Laureti Motors
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட லாருட்டி மோட்டார்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனையை 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரியில் அமைக்கப்பட உள்ள லாருட்டி மோட்டார்ஸ் ஆலையில் டியான்எக்ஸ் எஸ்யூவி மாடல் உற்பத்தி செய்யப்படுவதுடன் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கு USD 370 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.2,777 கோடி) ஆகும்
உற்பத்தி தொடங்குகிற முதலாண்டில் சுமார் 10,000 வாகனங்களையும், 2023 முதல் ஆண்டிற்கு எண்ணிக்கை 20,000 ஆக உயர்த்த லாரிட்டி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
லாருட்டி டியான்எக்ஸ்
2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் உற்பத்தியை தொடங்க உள்ள லாவ்ரெட்டி முதன்முறையாக லாவ்ரெட்டி டியான்எக்ஸ் என்ற மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த மாடல் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாகும்.
டியான்எக்ஸ் எஸ்யூவி மாடல் ஒரு முழுமையான சார்ஜிங் சமயத்தில் அதிகபட்சமாக 540 கிமீ தொலைவை கடக்கும் திறன் கொண்டதாக விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மையமாக கொண்டு வரும் ஆக்ஸ்டில் இந்நிறுவனம் ஜம்மு காஷ்மீர் லே முதல் சென்னை வரை உள்ள 6000 கிமீ தொலைவை வெறும் 12 சார்ஜிங் வாயிலாக மட்டுமே கடக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக லாருட்டி ஆட்டோமோடிக்ஸ் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி மார்கஸ் பாலீட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 14 மாதங்களாக மாநில (புதுச்சேரி) அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தற்போது இறுதி முடிவெடுக்கப்பட்டு ஆலை அமைப்பதற்காக அமெரிக்கா டாலர் 370 மில்லியன் மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
ரூ.40 லட்சம் ஆரம்ப விலையில் இரு விதமான வேரியன்ட் மாடலாக லாருட்டி டியான்எக்ஸ் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 5.4 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். இந்த எஸ்யூவி காரில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை கொண்டு பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.