டொயோட்டாவின் ஆடம்பர பிராண்டான லெக்சஸ் LM எம்பிவி காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. 2024 டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரினை அடிப்படையாக கொண்டது.
லெக்ஸஸ் எல்எம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிமுகமானது, இப்போது லெக்ஸஸ் இந்தியா அதன் வெளியீட்டை உறுதி செய்துள்ளது.
2023 Lexus LM
LM ஆனது வெஃபயர் உடன் பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்கிறது. இது TNGA-K இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு முந்தைய பதிப்பை விட 50% அதிக உறுதி கட்டுமானத்தை பெற்றதாக விளங்கும் என லெக்சஸ் தெரிவித்துள்ளது. LM பெரிய கிரில், எல்இடி ஹெட்லேம்ப், ரேப்பரவுண்ட் எல்இடி லைட் பார் பெற்றதாக உள்ளது.
லெக்ஸஸ் 2.4 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களுடன் 4-சிலிண்டர் என்ஜின்களுடன் LM மாடலில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்தியாவில், புதிய வெல்ஃபயர் மாடலில் இடம்பெற்றிருக்கின்ற அதே என்ஜினை எல்எம் மாடலும் பகிர்ந்து கொள்ளக்கூடும். 2.5 லிட்டர் பவர்டிரெய்ன் 193 hp மற்றும் 240 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் இ-சிவிடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
லெக்சஸ் எல்எம் காரில் 4-சீட்டர், 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளன. 4-சீட்டர் வகையும் இந்த வரிசையில் மிகவும் ஆடம்பரமான வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது.
டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி விலை ரூ.1.20 கோடி முதல் ரூ.1.30 கோடி வரை கிடைக்கும் நிலையில், லெக்சஸ் எல்எம் சற்று கூடுதலான விலையில் வரக்கூடும்.