Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

550 கிமீ ரேஞ்ச் வழங்கும் மஹிந்திரா BE 6e எஸ்யூவி வெளியிடப்பட்டது..!

By
ராஜா
Byராஜா
நான் ராஜா (BHP Raja) ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துள்ளேன். கடந்த ஒரு ஆண்டாக புதிய மின்வாகன செய்திகள் மற்றும் விமர்சனம் பற்றி ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.
Follow:
Last updated: 26,November 2024
Share
3 Min Read
SHARE

mahindra be 6e suv

மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ள புதிய BE பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக 6e வந்துள்ள நிலையில் 59Kwh, 79Kwh என இரு விதமான LFP பேட்டரி ஆப்ஷனை பெற்று 59Kwh வேரியண்ட் அறிமுக விலை ரூ.18.90 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டு ஆன்-ரோடு விலை ரூ.20.36 லட்சம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

BE என்ற பிராண்டினை மஹிந்திரா பி..இ.. என்று அழைக்கமால் Be (verb) என்றே உச்சரிக்கும் வகையில் அழைக்கின்றது. எலெக்ட்ரிக் கார்களுக்கு என மஹிந்திரா உருவாக்கியுள்ள பிரத்தியேகமான INGLO பிளாட்ஃபாரத்திற்கு என 152 காப்புரிமை மற்றும் 45 டிசைன் பதிவுகளை மேற்கொண்டுள்ளது.

மிகவும் மாறுபட்ட ஸ்டைலிங் அம்சங்களுடன் நவீனத்துவமான வடிவமைப்பினை வெளிப்படுத்துகின்ற BE 6e எஸ்யூவி காரில் முழுமையான எல்இடி விளக்குகள் நேர்த்தியான தோற்ற பொலிவு என கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. இன்டிரியரில் 12.3-இன்ச் தொடுதிரை கிளஸ்ட்டருடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று MAIA எனப்படுவதுடன் பல்வேறு பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. முக்கிய வசதிகளில் டால்பி அட்மோஸ் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், சுற்றுப்புற விளக்குகள், இயங்கும் ஓட்டுனர் இருக்கை, உள்ளமைக்கப்பட்ட வைஃபையுடன் 5G இணைப்பு உள்ளது.

mahindra be 6e suv dashboard 1

BE 6e Battery and Range

பேட்டரி ஆப்ஷனை பொறுத்தவரை 59kWh வேரியண்ட் 231hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் ரேஞ்ச் 535 கிமீ (ARAI) மற்றும் டாப் 79kWh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் 286hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 682Km (ARAI) அல்லது 550km ரேஞ்ச் (WLTP) வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டாப் வேரியண்டில் 6.7 வினாடிகளில் 0-100kph வேகத்தை எட்டும் என மஹிந்திரா குறிப்பிடும் நிலையில் இந்த காரில் ரேஞ்ச், எவ்ரிடே மற்றும் ரேஸ் என மூன்று டிரைவ் மோடுகளை கொண்டுள்ளது.

More Auto News

2016 ஆடி ஏ4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்
இந்தியாவில் ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை , சிறப்புகள் என்ன
ரூ.19.49 லட்சத்தில் ஜீப் காம்பஸ் சேன்ட்ஸ்ட்ராம் எடிசன் விற்பனைக்கு வந்தது.!
ரூ.9.99 லட்சத்தில் டாடா டிகோர் மின்சார கார் விற்பனைக்கு வெளியானது
இந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்

மஹிந்திரா இந்த மாடலின் பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி வழங்குவதுடன் 175kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, பேட்டரிகள் 20 நிமிடங்களில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும், மற்றபடி 11.2kW AC சார்ஜர் அல்லது 7.3kWh சார்ஜரை சார்ஜ் செய்யக்கூடிய ஆப்ஷனும் உள்ளது.

BE 6e காரின் அளவுகளை பொறுத்தவரை 4,371 மிமீ நீளம், 1907மிமீ அகலம் மற்றும் 1627மிமீ உயரம் கொண்டு 2,775 மிமீ வீல்பேஸ் மற்றும் 207 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றுள்ளது. இந்த எஸ்யூவி 445 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் முன்புறத்தில் 45 லிட்டர் கொள்ளளவு ஃப்ரங்க் கொண்டுள்ளது.

BE 6e மாடலில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், கியர் விகிதங்களுக்கு ஏற்ற எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம், பிரேக்-பை-வயர் தொழில்நுட்பம் மற்றும் நான்கு வீலுக்கும் டிஸ்க் பிரேக்குகளும் உள்ளது. மற்ற பாதுகாப்பு அம்சங்களில் ஆட்டோ பார்க் அசிஸ்ட், காரில் உள்ள கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், லெவல் 2 ADAS தொகுப்பு, 360 டிகிரி கேமராக்கள் மற்றும் 7 ஏர்பேக்குகள் உள்ளன.

19 அங்குல  245/55 டயர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆப்ஷனலாக 245/50 20 அங்குல டயரை பெறலாம்.

தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Be 6e மாடலின் அறிமுக சலுகை விலை ஆரம்ப நிலை பேக் 1 மாடலுடையதாகும். முன்பதிவு துவங்கப்பட்டு பிப்ரவரி அல்லது மார்ச் 2025 முதல் டெலிவரி துவங்கும், முழுமையான விலை பட்டியல் ஜனவரி 17 , பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் வெளியாகும்.

mahindra be 6e and xev 9e tech specs

mahindra be 6e suv front
mahindra be 6e suv dashboard view
mahindra be 6e suv dashboard 1
mahindra be 6e suv
ஃபோர்டு எக்ஸ்புளோர் எஸ்யுவி கார்
Toyota Hyryder SUV: டொயோட்டா ஹைரைடர் எஸ்யூவி அறிமுகம்
ரூ.20.99 லட்சத்தில் 2021 எம்ஜி ZS EV விற்பனைக்கு வெளியானது
கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மஹிந்திரா XUV700
ஹோண்டா சிட்டி கார்
TAGGED:MahindraMahindra BE 6e
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
பல்சர் 125 பைக்
Bajaj
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
bajaj chetak escooter
Bajaj
2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், சிறப்புகள்
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved