மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கான BE மற்றும் XUV.e பிராண்டில் வெளிவந்த BE.05 காரின் அடிப்படையில் BE Rall-E எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஆஃப்-ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் மிக நேர்த்தியான முறையில் வடிவமைத்துள்ளது.
ஹைதராபாத்தில் நடந்த மஹிந்திரா EV பேஷன் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட்ட Rall-E காருடன் கூடுதலாக மஹிந்திரா தனது XUV.e9 கான்செப்ட்டை இந்தியாவில் முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.
மஹிந்திரா BE Rall-E
அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிஇ ரேலி காரில் பிரகாசமான ஃப்ளோரசன்ட் பச்சை வண்ணத்தை சேர்த்து பல வண்ணத்திலான கிராபிக்ஸ் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்கின் கீழே பச்சை வண்ணப்பூச்சின் வழங்கியுள்ளது.
Rall-E EV மாடலில் ஆஃப்-ரோடிங்கின் போது பயனயளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டு மிக அகலமான டயர்களுடன் கொண்ட ஸ்டீல் சக்கரங்களைக் கொண்டுள்ளது, உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கான பெரிய கூரை ரேக், BE 05 மாடலை விட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்; மற்றும் வழக்கமான வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.
Mahindra INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் 80kWh வரை திறன் கொண்ட மிக நீண்ட தொலைவு பயணிக்கும் பேட்டரி ஆப்ஷனுடன் சுமார் 450km ரேஞ்சு பெற்றிருக்கும். இது தவிர 175kW வரை வேகமாக சார்ஜ் செய்யும் திறனையும் கொண்டிருக்கும்.
மஹிந்திரா XUV.e கார்கள் டிசம்பர் 2024 முதல் உற்பத்தி துவங்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அதைத் தொடர்ந்து BE மாடல்கள் அக்டோபர் 2025 முதல் விற்பனைக்கு கிடைக்கும். XUV.e9 மற்றும் BE.05 ஆகியவை முறையே ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 விற்பனைக்கு வரக்கூடும்.
மஹிந்திரா BE என்றால் என்ன ?
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் BE (Born Electric) மற்றும் XUV.e என இரு எலெக்ட்ரிக் பிராண்டுகளை உருவாக்கியுள்ளது
மஹிந்திரா BE Rall E விற்பனைக்கு வருமா?
மஹிந்திரா BE Rall E ஆஃப்-ரோடு எலெக்ட்ரிக் கார் 2025 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரக்கூடும்.