மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின், இ வெரிட்டோ காரின் விலையை 80 ஆயிரம் ரூபாய் வரை ஜிஎஸ்டி வரி குறைப்பினால் இந்நிறுவனம் குறைத்துள்ளது. தற்போது eவெரிட்டோ காரின் ஆரம்ப விலை 10 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயில் தொடங்குகின்றது.
ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி எனப்படுகின்ற சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக குறைத்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மின்சார வாகனங்களும் விலை குறைய உள்ளது. எனவே, டாடாவின் டிகோர் காரை தொடர்ந்து இவெரிட்டோ, இசுப்ரோ மற்றும் டிரியோ ஆகிய மாடல்களின் விலையை குறைத்துள்ளது. சமீபத்தில் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏத்தர் தனது மாடல்களின் விலையை ரூ.8,000-ரூ.9,000 வரை குறைத்திருந்தது.
வெரிட்டோ செடான் காரின் தோற்றத்திலே அமைந்துள்ள இவெரிட்டோ தோற்ற அமைப்பிலும் உட்புறத்திலும் பெரிதாக எந்த மாற்றிதினையும் பெறவில்லை. 72 வோல்ட் லித்தியம் ஐன் பேட்டரியின் மூலம் மின்சாரம் சேமித்து வைத்து மூன்று பேஸ் இன்டக்ஷன் ஏசி மோட்டார் மூலம் ஒற்றை வேக டிரான்ஸ்மிஷனுடன் இயங்குகின்றது. கிளட்ச் இல்லாத மாடலாகும்.
41 hp திறன் மற்றும் 91 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் வகையில் இதன் செயல்திறன் அமைந்துள்ளது.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 8.45 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.. வேகமான சார்ஜிங் முறையின் வாயிலாக 80 சதவீத சார்ஜ் வெறும் 1.45 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். ஆனால் இது மஹிந்திராவின் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தில் மட்டுமே சாத்தியம். முழுமையான சார்ஜ்யில் 110 கிமீ வரை பயணிக்க இயலும். மஹிந்திரா இ-வெரிட்டோ மின்சார காரின் உச்ச வேகம் மணிக்கு 86 கிமீ ஆகும்.
மத்திய அரசு FAME II ஊக்கத்தொகை திட்டத்தை தனிநபர் வாகனங்களுக்கு வழங்குவதில்லை. டாக்சி சார்ந்த சேவைளுக்கு மட்டும் வழங்குகின்றது.
மஹிந்திரா eவெரிட்டோ காரின் தனிநபர் பயன்பாட்டிற்கு ரூபாய் 13.70-14.20 லட்சத்தில் விற்பனைக்கு (ஆன்-ரோடு) கிடைக்கின்றது.
மஹிந்திரா டிரியோ மூன்று சக்கர ஆட்டோ விலை ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது விலை ரூபாய் 2.05 லட்சம் (ஆன்ரோடு) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.