Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

டீசல் என்ஜின் பெற்ற கேயூவி100 எஸ்யூவி காரை நீக்கும் மஹிந்திரா

By MR.Durai
Last updated: 5,June 2019
Share
SHARE

kuv100 nxt

மினி எஸ்யூவி கார் என அழைக்கப்படுகின்ற மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காரில் விற்பனை செய்யப்படுகின்ற டீசல் என்ஜினை பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றும் திட்டத்தை மஹிந்திரா அண்டு மஹிந்திரா கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

பிஎஸ் 6 நடைமுறைக்கு டீசல் பிரிவில் மொத்தமாக எட்டு டீசல் என்ஜின்களை உற்பத்தி செய்ய உள்ளது. வரவுள்ள மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப என்ஜினை தயாரிக்க ரூ.10,000 கோடி முதலீட்டை மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. ஆனால் 1.2 லிட்டர் எம் ஃபால்கான் D75  டீசல் என்ஜின் புதிய மாசு விதிகளுக்கு மாற்றும் திட்டத்தை கைவிட்டுள்ளது.

மஹிந்திரா பிஎஸ் 6

தற்போது விற்பனையில் உள்ள 77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100 காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

இந்த என்ஜின் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்படும் போது மிக கடுமையான விலை ஏற்றத்தை சிறிய ரக கார் சந்திக்கும் என்பதனால் இந்த என்ஜினை ஸ்டாக் உள்ள வரை மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கேயூவி100 காரில் எம்ஃபால்கான் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் மட்டும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது அனைத்து மாடல்களிலும் பாரத் ஸ்டேஜ் 6 என்ஜின் மட்டும் பொருத்தப்பட்ட கார்கள் விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மஹிந்திராவின் பிஎஸ் 6 டீசல் என்ஜின்கள்

மஹிந்திரா நிறுவனம், 625சிசி மற்றும் 45 ஹெச்பி பவர் மற்றும் 98 என்எம் டார்க் வழங்கும் 909சிசி டீசல் என்ஜினை தயாரிக்க உள்ளது. இந்த என்ஜின் சுப்ரோ மற்றும் ஜீடூ மாடல்களில் கிடைக்கும். அடுத்தப்படியாக பொலிரோ பவர் பிளஸ் மற்றும் TUV300 கார்களில் பிஎஸ் 6 ரக 1,493cc மூன்று சிலிண்டர் என்ஜின் பெற்றிருக்கும்.

வெரிட்டோ காரில் 1,461cc நான்கு சிலிண்டர் என்ஜினும், XUV300 மற்றும் மராஸ்ஸோ கார்களில் 115hp பவர் மற்றும் 300Nm வெளிபடுத்தும் 1,497cc நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்தப்படியாக 2.2 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் என்ஜின்கள் வழங்க உள்ளது.

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
TAGGED:Mahindra
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ்
Honda Bikes
2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
hero destini prime price
Hero Motocorp
2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
சுசூகி ஜிக்ஸர்
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms