மினி எஸ்யூவி கார் என அழைக்கப்படுகின்ற மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காரில் விற்பனை செய்யப்படுகின்ற டீசல் என்ஜினை பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றும் திட்டத்தை மஹிந்திரா அண்டு மஹிந்திரா கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பிஎஸ் 6 நடைமுறைக்கு டீசல் பிரிவில் மொத்தமாக எட்டு டீசல் என்ஜின்களை உற்பத்தி செய்ய உள்ளது. வரவுள்ள மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப என்ஜினை தயாரிக்க ரூ.10,000 கோடி முதலீட்டை மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. ஆனால் 1.2 லிட்டர் எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் புதிய மாசு விதிகளுக்கு மாற்றும் திட்டத்தை கைவிட்டுள்ளது.
மஹிந்திரா பிஎஸ் 6
தற்போது விற்பனையில் உள்ள 77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100 காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.
இந்த என்ஜின் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்படும் போது மிக கடுமையான விலை ஏற்றத்தை சிறிய ரக கார் சந்திக்கும் என்பதனால் இந்த என்ஜினை ஸ்டாக் உள்ள வரை மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கேயூவி100 காரில் எம்ஃபால்கான் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் மட்டும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது அனைத்து மாடல்களிலும் பாரத் ஸ்டேஜ் 6 என்ஜின் மட்டும் பொருத்தப்பட்ட கார்கள் விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
மஹிந்திராவின் பிஎஸ் 6 டீசல் என்ஜின்கள்
மஹிந்திரா நிறுவனம், 625சிசி மற்றும் 45 ஹெச்பி பவர் மற்றும் 98 என்எம் டார்க் வழங்கும் 909சிசி டீசல் என்ஜினை தயாரிக்க உள்ளது. இந்த என்ஜின் சுப்ரோ மற்றும் ஜீடூ மாடல்களில் கிடைக்கும். அடுத்தப்படியாக பொலிரோ பவர் பிளஸ் மற்றும் TUV300 கார்களில் பிஎஸ் 6 ரக 1,493cc மூன்று சிலிண்டர் என்ஜின் பெற்றிருக்கும்.
வெரிட்டோ காரில் 1,461cc நான்கு சிலிண்டர் என்ஜினும், XUV300 மற்றும் மராஸ்ஸோ கார்களில் 115hp பவர் மற்றும் 300Nm வெளிபடுத்தும் 1,497cc நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்தப்படியாக 2.2 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் என்ஜின்கள் வழங்க உள்ளது.