Categories: Car News

டாக்சி சந்தைக்கு மஹிந்திரா KUV100 ட்ரிப் விற்பனைக்கு வந்தது

Mahindra KUV100 TRIPமஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் யுட்டிலிட்டி வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ள நிலையில், தனது சிறிய ரக கேயூவி100 எஸ்யூவி மாடலை டாக்சி சந்தைக்கு ஏற்ற வகையில் மஹிந்திரா KUV100 ட்ரிப் என்ற பெயரில் பெட்ரோல்-சிஎன்ஜி மற்றும் டீசல் ஆகிய வகையில் வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா KUV100 ட்ரிப்

ஃபிளிட் ஆப்ரேட்டர்கள் மற்றும் டாக்சி சார்ந்த சேவைகள் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள கேயூவி100 ட்ரிப் மாடல் குறைந்த பராமரிப்பு செலவு கொண்டதாக விளங்கும் என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கார் கிலோ மீட்டருக்கு ரூ.0.35 முதல் ரூ. 0.45 பைசா வரை மட்டும் செலவாகுவதுடன், 5 வருட நிரந்தர வாரண்டி அம்சத்தை செயற்படுத்தி உள்ளது.

80 கிமீ வேகம் என அரசு வரையறையின் படி வேக கட்டுப்பாடு கருவ பொருத்தப்பட்ட மஹிந்திரா KUV100 ட்ரிப் மாடலில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரட்டை எரிபொருள் கொண்ட அமைப்பு , விற்பனையில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 ஹெச்பி ஆற்றல் வழங்குவதுடன், சிஎன்ஜி வகையில் 70 ஹெச்பி ஆற்றல் வழங்குவதுடன் 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி டேங்க் இணைக்கப்பட்டுள்ளது.

டீசல் மாடலில் தொடர்ந்து விற்பனையில் உள்ள 77 ஹெச்பி மாடல் சந்தையில் கிடைக்க உள்ளது.

இன்டிரியர் அமைப்பில் பெட்ரோல் & சிஎன்ஜி வேரியன்டில் 5 மற்றும் 6 இருக்கைகள் கொண்ட வேரியன்டில் கிடைக்கும். டீசல் மாடலில் 6 இருக்கைகள் கொண்ட வேரியன்ட் மட்டும் கிடைக்க உள்ளது. இந்த காரின் மற்ற வசதிகளாக ஏபிஎஸ், ஏசி, பவர் ஸ்டியரிங் ஆகியவற்றுடன் வெள்ளை மற்றும் சில்வர் நிறங்களில் மட்டும் ட்ரிப் மாடல் கிடைக்க உள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவரான வீஜேய் ராம் நக்ரா கூறுகையில், கேயூவி 100 ட்ரிப் 6 வது சீட்டர் விருப்பம், விசாலமான உட்புறம், குறைந்த பராமரிப்பு செலவு, கவர்ச்சிகரமான விலை மற்றும் அதிக வருவாய் திறன் ஆகியவற்றைக் கொண்டு KUV100 ட்ரிப் ஃபிளிட் மற்றும் டாக்சி உரிமையாளர்களுக்கு மிகச் சிறந்த வருவாய் தரக்கூடிய மாடலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்திரா KUV100 Trip விலை பட்டியல்

மஹிந்திரா KUV100 Trip பெட்ரோல்-சிஎன்ஜி – ரூ.5.16 லட்சம்

மஹிந்திரா KUV100 Trip டீசல் – ரூ.5.42 லட்சம்

(ex-showroom, Delhi)