மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ள எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய இரண்டு மாடல்களில் என்ஜின் பகுதியில் உள்ள வயரிங் சிராய்ப்பு கோளாறினை இலவசமாக நீக்குவதற்க்கு திரும்ப அழைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து அதைத் தொடர்ந்து சரிசெய்தல் இலவசமாக மேற்கொள்ளப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திரா XU700 எஸ்யூவியின் மொத்தம் 1,08,306 யூனிட்கள் தயாரிக்கப்பட்ட ஜூன் 8, 2021 மற்றும் ஜூன் 28, 2023 ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, பிப்ரவரி 16, 2023 முதல் ஜூன் 5, 2023 வரை தயாரிக்கப்பட்ட XUV400 எலக்ட்ரிக் எஸ்யூவியின் மொத்தம் 3,560 யூனிட்களும் திரும்ப அழைக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட வாகனங்கள் பிரேக் பொட்டென்டோமீட்டரின் பயனற்ற ஸ்பிரிங் ரிட்டர்ன் நடவடிக்கையை சரி செய்யப்பட உள்ளது.