இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜனவரி 2021 முதல் பெரும்பாலான நிறுவனங்கள் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்திரா தனது எஸ்யூவிகள், வர்த்தக வாகனங்கள், டிரக்குகள் விலையை அதிகரிக்க உள்ளது.

முன்பாக மாருதி சுசூகி, ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் விலை உயர்த்துவதனை உறுதி செய்துள்ள நிலையில், இந்த பட்டியலில் மஹிந்திராவும் இணைந்துள்ளது. உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பால் உயர்வினை தவிரக்க இயலாத ஒன்றாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் மட்டுமல்லாமல் வரத்தக வாகனங்களின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளது. ஆனால் மாடல் வாரியாக உயர்த்தப்பட உள்ள விலை குறித்து தற்போது அறிவிக்கவில்லை. சமீபத்தில் தான் மஹிந்திரா தார் எஸ்யூவி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த மாடல் தவிர மற்றவற்றின் விலை அதிகரிக்கப்படும்.