இந்தியாவின் பிரபலமான ஆஃப்ரோடு எஸ்யவிகளில் ஒன்றான மஹிந்திரா தார் 700 எஸ்யூவி மாடல் சிறப்பு எடிஷன் மொத்தமாக 700 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. முதல் தலைமுறை தார் எஸ்யூவி உற்பத்தி நிறைவுக்கு வரவுள்ள நிலையில் சிறப்பு எடிஷனை சாதாரன மாடலை விட ரூ. 50,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பல்வேறு கூடுதல் அம்சங்களை பெற்றுள்ள தார் 700 மாடலில் 2.5 லிட்டர் CRDe என்ஜின் பெற்று 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ளதால் ஏப்ரல் 1 , 2019 க்கு பிறகு உற்பத்தி செய்யப்பட மாடல்களாகுவும், ஜூலை 1, 2019 முன்பாக உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த காரில் ஓட்டுநர் காற்றுப்பை, பயிணிகள் இருக்கை பட்டை நினைவூட்டல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் பெறாத வாகனங்களை ஜூலை 1க்கு பிறகு தயாரிக்க இயலாது.
மஹிந்திரா தார் 700 எஸ்யூவியின் விபரம்
கருப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் கிடைக்க உள்ள தார் 700 எஸ்யூவியில் 2.5 லிட்டர் என்ஜின் கொண்ட எடிசன் மாடல் அதிகபட்சமாக 105 bhp பவர் மற்றும் 247 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டு 4×4 டிரான்ஸ்ஃபெர் கேஸ் கொண்டிருக்கின்றது.
வலது புற ஃபென்டரில் மஹிந்திரா தார் 700 பேட்ஜ் பதிக்கப்பட்டு மஹிந்திராவின் தலைவர் ஆனந்த மஹிந்திரா கையெழுத்திடப்பட்டுள்ளது. இதுதவிர, சில்வர் நிற பூச்சை பெற்ற முன்புற பம்பர் கொண்டுள்ளது. கருப்பு நிற கிரில், முன்புற இருக்கைகளில் தார் லோகோ, லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவற்றை கொண்டுள்ளது.
700 கார்கள் மட்டும் தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ள மஹிந்திரா தார் 700 எஸ்யூவி விலை ரூ.9.99 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. முதல் தலைமுறை தார் எஸ்யூவி காரின் இறுதி 700 மாடல்களாகும். வரும் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் புதிய தார் மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ளது.