நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு அதிகார்வப்பூர்வமாக மஹிந்திரா TUV300 பிளஸ் கார் ரூ. 9.70 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஒற்றை வேரியன்டில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டியூவி300 பிளஸ் மாடல் 9 இருக்கைகளை கொண்டுள்ளது.
மஹிந்திரா TUV300 பிளஸ்
பிரசத்தி பெற்ற டியூவி300 எஸ்யூவி ரக மாடலின் அடிப்படையில் 9 இருக்கை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டியூவி300 பிளஸ் ரக எஸ்யூவி மாடல் P4 எனும் வேரியண்டில் ரூ. 9,70,734 விலையில் தமிழ்நாட்டில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.
டியூவி 300 காரில் இடம் பெற்றுள்ள 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 100ஹெச்பி ஆற்றலுடன் 240 என்எம் டார்க் வழங்கி வரும் நிலையில், புதிதாக வரவுள்ள டியூவி300 பிளஸ் காரில் m-Hawk D120 என்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளதால், இதில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 120 ஹெச்பி ஆற்றலுடன் 280 என்எம் டார்க் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கப் பெற உள்ளது.
தோற்ற அமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல், பின்புறத்தில் மட்டும் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு டெயில்விளக்கு புதிதாக இணைக்கப்பட்டு அதிகபட்சமாக 9 இருக்கைகள் கொண்ட காராக டியூவி 300 பிளஸ் விளங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
TUV300 Plus P4 வேரியன்ட் 4400 மிமீ நீளம் கொண்டதாக அமைந்துள்ள மாடல் சாதாரண மாடலை விட 401 மிமீ கூடுதலான நீளத்தை பெற்று 1835மிமீ அகலம் மற்றும் 1821மிமீ உயரம் கொண்டுள்ள இந்த வேரியன்டில் 2,680 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது.
கருப்பு நிற இன்டிரியரை கொண்டுள்ள இந்த வேரியன்ட் ஏசி, ஹீட்டர், பவர் லாக வின்டோஸ் பெற்றுள்ள இந்த காரில் மூன்றாவது வரிசை இருக்கை மடிக்கும் வகையிலான பக்கவாட்டில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ்நாட்டில் மஹிந்திரா டியூவி300 பிளஸ் P4 விலை ரூ. 9,70,734 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)