விற்பனையில் உள்ள XUV700 எஸ்யூவி காரின் அடிப்படையில் மஹிந்திராவின் முதல் INGLO பிளாட்ஃபாரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட உள்ள XUV.e8 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் மாதிரி தோற்றத்தை காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
புதிய மாடல் மிக சிறப்பான ரேஞ்ச் மற்றும் அதிகப்படியான வசதிகள் என பல்வேறு நவீனத்துவமான அம்சங்களை பெற்றிருக்கும். குறிப்பாக இன்டீரியரில் மிக அகலமான டேஷ்போர்டு ஆனது கொடுக்கப்பட்டு அதில் முழுமையாக தொடுதிரை சார்ந்த மூன்று விதமான ஸ்கிரீன் அம்சங்கள் மற்றும் பல்வேறு Adrenox கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் கூடிய உயர் தரமான பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கும். இரண்டு ஸ்போக்குகளை கொண்ட பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் மற்றும் அதன் மத்தியில் ஒளிரும் வகையிலான மஹிந்திரா லோகோ பெற்றிருக்கும்.
XUV.e8 ஆனது XUV700 மாடலை போலவே தோற்றம் மட்டுமல்ல அளவுகளிலும், மூன்று வரிசை இருக்கைகளையும் பகிர்ந்து கொள்ளும். இந்த மாடல் 4,740மிமீ நீளம், 1,900மிமீ அகலம் மற்றும் 1,760மிமீ உயரம் பெற்றுள்ளது. XUV700 உடன் ஒப்பீடும் பொழுது 45மிமீ நீளம், 10மிமீ அகலம் மற்றும் 5மிமீ உயரம் கொண்டுள்ளது.
அடுத்து, 2,762மிமீ வீல்பேஸ் பெற்றுள்ளதால் XUV700 காரை விட 7மிமீ வரை வீல்பேஸ் கூடுதலாக உள்ளது.
XUV.e8 எலக்ட்ரிக் எஸ்யூவி ரேஞ்ச் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இந்த மாடலில் 80kWh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளதால் 600 முதல் 700 கிமீ வரையிலான ரேஞ்சை சிங்கிள் சார்ஜில் வெளிபடுத்துவதுடன் சிங்கிள் மோட்டார் பெற்று RWD மற்றும் இரட்டை மோட்டாருடன் AWD என இருவிதமான ஆப்ஷனை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
நடப்பு ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா XUV.e8 விலை ரூ.25 லட்சத்துக்கும் கூடுதலாக துவங்கலாம்.