Automobile Tamilan

ரூ.4.40 லட்சம் வரை மஹிந்திராவின் XUV400, XUV300 கார்களுக்கு தள்ளுபடி

mahindra xuv300

மஹிந்திரா நிறுவனம் 2023 ஆம் ஆண்டிற்கான XUV300 மற்றும் XUV400 என இரண்டு மாடல்களுக்கு ரூ.1.82 லட்சம் முதல் ரூ.4.40 லட்சம் வரை இறுதிகட்ட சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை டீலர்களிடம் கையிருப்பில் உள்ள வரை மட்டுமே கிடைக்கும்.

2024 மஹிந்திரா XUV300 விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் வெளியிடப்பட வாயப்புள்ளது. ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் 2024 XUV400 EV எஸ்யூவி கூடுதலான வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வெளியானது.

Mahindra offer MY2023

MY2023 மஹிந்திரா XUV300 காருக்கு ரூ.51,000 முதல் ரூ.1.82 லட்சம் வரை வேரியண்ட் வாரியாக மாறுபட்ட வகையில் சலுகைகள் கிடைக்கின்றது. தற்பொழுது தயாரிக்கப்பட்ட MY2024 மாடலுக்கும் சலுகை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது. இந்த காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதி கொண்டாட்டத்தில் ரூ.4.20 லட்சம் சலுகை பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 400 மாடல் தற்பொழுது இருப்பில் உள்ள XUV400 EV MY2023 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.4.40 லட்சம் வரை கிடைக்கின்றது.

மேலும் படிக்க – 2024 மஹிந்திரா XUV400 எஸ்யூவி சிறப்புகள்

Exit mobile version