பிஎஸ்4 மாடலை விட ரூ.20,000 வரை பெட்ரோல் ரக மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரை பிஎஸ்6 நடைமுறைக்கு மாற்றி விலையை உயர்த்தி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் ரூ. 8.30 லட்சம் முதல் ரூ.11.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பாக வெளிவந்த சில விபரங்களின் படி பிஎஸ்6 மாடல் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 110 ஹெச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎஸ்4 மாடல் 200 என்எம் டார்க் வழங்கியது குறிப்பிடதக்கதாகும். பிஎஸ்6 டீசல் என்ஜின் அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

XUV300 காரின் டாப் வேரிச்டில் இடம்பெற்றுள்ள7 ஏர்பேக்குகள், 4 டிஸ்க் பிரேக்குகள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார், சன் ரூஃப், 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் போன்றவை 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற எஸ்யூவி போட்டியாளர்களிடம் இல்லாத வசதிகளாகும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ டாடா நெக்ஸான், ஹோண்டா WR-V, ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களை நேரடியாக மஹிந்திரா XUV300 கார் எதிர்கொள்ளுகின்றது.

பிஎஸ்6 பெட்ரோல் மஹிந்திரா XUV300 விலை ரூ.8.30 லட்சம் முதல் ரூ.11.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும்.