ரூபாய் 11.35 லட்சம் ஆரம்ப விலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில், 300க்கு மேற்பட்ட தனது மஹிந்திரா ஷோரூம்களை வோர்ல்டு எஸ்யூவி டீலர்ஷீப் முறையில் மாற்றியுள்ளது.
டீசல் ரக என்ஜின் கொண்ட மாடலில் வெளியிடப்பட்டுள்ள ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆனது டாப் வேரியண்ட் W8 மற்றும் W8 (O) அடிப்படையில் வந்துள்ளது. இரண்டு வேரியண்டுகளிலும் பல்வேறு நவீன வசதிகளுடன் குறிப்பாக ஆப்ஷனல் வேரியண்டில் 5 ஏர்பேக்குகள், சன் ரூஃப், டைமண்ட் கட் அலாய் வீல், ஆகியவற்றை பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியான ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்யூவி 300 எஸ்யூவி காரில் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.
117 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டதாக அமைந்திருக்கின்றது. இந்த என்ஜினில் தற்போது 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. தற்போது டீசல் எக்ஸ்யூவி300 ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியை கொண்டுள்ளது.
இரு விதமான வேரியண்டில் உள்ள சில முக்கிய விபரங்களில் குறிப்பாக W8 வேரியண்ட்டில், 17 அங்குல அலாய் வீல், இரட்டை ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட், ஈஎஸ்பி, முன் மற்றும் பின்புற பனி விளக்குகள், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள், இரட்டை ஷோன் ஏசி கட்டுப்பாடு, எல்இடி டிஆர்எல் கொண்ட புராஜெக்டர் ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட கீலெஸ் என்ட்ரி, என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி போன்றவை கொண்டுள்ளது.
W8 (O) வேரியண்ட்டில், ஐந்து ஏர்பேக்குகள், சன் ரூஃப், ஹீட்டேட் விங் கண்ணாடிகள், டைமண்ட் கட் அலாய், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லீதரெட் அப்ஹோல்ஸ்டரி போன்ற வசதிகள் உள்ளன.
மஹிந்திரா XUV300 W8 – ரூ. 11.35 லட்சம்
மஹிந்திரா XUV300 W8 (O) – ரூ. 12.55 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…