இந்தியாவில் எஸ்யூவி சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யூவி 300 விற்பனையில் புதிய எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. கடந்த பிப்ரவரி 14-ல் வெளியான எக்ஸ்யூவி 300 காரின் முன்பதிவு எண்ணிக்கை 26,000 கடந்துள்ளது.
குறிப்பாக இந்த காரினை முன்பதிவு செய்தவர்களின் 70 சதவீதத்துக்கும் கூடுதலான புக்கிங் டாப் வேரியன்ட் பெற்றுள்ளது. மேலும் 40 சதவீத மாடல்கள் பெட்ரோல் என்ஜின் கொண்டவையாகும். இந்த காரானது நெக்ஸான் எஸ்யூவி மாடலை பின்னுக்கு தள்ளி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு சவாலாக அமைந்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 சிறப்புகள்
110 hp பவர் மற்றும் 200 NM டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மஹிந்திரா XUV300 பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ ஆகும்.
டீசல் தேர்வில் 115 hp பவர் வெளிப்படுத்தும் என்ஜின் அதிகபட்சமாக 300 NM டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மஹிந்திரா XUV300 டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ ஆகும்.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹோண்டா WR-V, ரெனோ டஸ்ட்டர் மற்றும் நிசான் கிக்ஸ் உள்ளிட்ட மாடல்களை நேரடியாக எதிர்கொள்கின்ற இந்த எஸ்யூவி வென்யூ காரினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 விலை பட்டியல்
XUV300 W4 (petrol) – ரூ. 7.90 லட்சம்
XUV300 W6 (petrol) – ரூ. 8.75 லட்சம்
XUV300 W8 (petrol) – ரூ. 10.25 லட்சம்
XUV300 W8 (O) (petrol) – ரூ. 11.44 லட்சம்
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டீசல் கார் விலை பட்டியல்
XUV300 W4 (Diesel) – ரூ. 8.49 லட்சம்
XUV300 W6 (Diesel) – ரூ. 9.30 லட்சம்
XUV300 W8 (Diesel) – ரூ. 10.80 லட்சம்
XUV300 W8 (O) (Diesel) – ரூ. 11.99 லட்சம்
(விற்பனையக விலை டெல்லி)