குளோபல் கிராஷ் டெஸ்ட் (Global NCAP- New Car Assessment Program) மையத்தால் இந்தியளவில் சோதனை செய்யப்பட்ட கார்களில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற இரண்டாவது மஹிந்திரா நிறுவன கார் என்ற பெருமையை XUV700 எஸ்யூவி பெற்றுள்ளது.
முன்பாக இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்ற கார்களில் 5 நட்சத்திர மதிப்பை பெற்ற கார்களில் டாடா பஞ்ச், நெக்ஸான், எக்ஸ்யூவி 300, அல்ட்ராஸ் இடம்பெற்றிருந்த நிலையில் எக்ஸ்யூவி 700 காரும் இடம்பெற்றுள்ளது.
எக்ஸ்யூவி 700 கிராஷ் டெஸ்ட் முடிவுகள்
XUV700 காரினை மணிக்கு 64 கிமீ வேகத்தில் முன்பக்க ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் (ODB) சோதனை மற்றும் ODB சோதனைக்கு கூடுதலாக, பக்கவாட்டிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சோதனையின் முடிவில் XUV700 காரின் வயது வந்தோருக்கான பாதுகாப்பிற்காக சாத்தியமான அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 16.03 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 49 புள்ளிகளுக்கு 41.66 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த காரில் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை, கழுத்து, மார்பு மற்றும் முழங்கால்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காரின் பாடி ஷெல் மற்றும் ஃபுட்வெல் ‘நிலையானது’ மற்றும் கூடுதல் சுமையை தாங்கும் திறன் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மஹிந்திரா XUV700 எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.11.99 லட்சம் ரூ. 22.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) வரை கிடைக்கின்றது.