மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற கார்களில் ஒன்றான பலேனோ விற்பனைக்கு வந்த 44 மாதங்களில் 6 இலட்சம் விற்பனை இலக்கை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்தியாவின் முதன்மையான மாருதி பலேனோ காரின் போட்டியாளர்களாக ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் எலைட் ஐ20 போன்ற கார்களுடன் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் வெளியிடப்பட்ட பலேனோ கார் தொடர்ந்து மாதந்திர விற்பனையில் முதல் இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், பிரீமியம் ரக ஹேட்ச்பேக் பிரிவில் இந்திய பயணிகள் வாகன சந்தையின் 27 சதவீத பங்களிப்பை பெற்று முதன்மையான மாடலாக விளங்குகின்றது.
இந்தியாவில் மட்டும் பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகின்ற பலேனோ , சர்வதேச அளவில் ஜப்பான, ஆஸ்திரேலியா, லத்தின் அமெரிக்கா, கிழக்காசியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
பலேனோ RS காரில் 100.5 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெற்ற பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பெற்றிருக்கும். இதன் டார்க் 150 NM ஆகும். பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது. பலேனோ ஆர்எஸ் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.1 கிமீ ஆகும்.
74 bhp ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் டார்க் 190 NM மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கிறது.
புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12C பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு லித்தியம் ஐயன் பேட்டரி ஆதரவை கொண்டதாக உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு மைலேஜ் 23.47 கிலோமீட்டர் ஆகும். முன்பாக விற்பனைக்கு கிடைக்கின்ற 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12B என்ஜின் லிட்டருக்கு 21.4 கிமீ மட்டும் வழங்கி வந்தது.
வருகின்ற ஜூன் 6ஆம் தேதி மாருதி பலேனோ காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள டொயோட்டா கிளான்ஸா கார் இந்தியாவில் வெளியாக உள்ளது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…