Automobile Tamilan

7 இருக்கை மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா அறிமுக விபரம்

maruti suzuki grand vitara

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிராண்ட் விட்டாரா எஸ்யூவி மாடலின் அடிப்படையில் 7 இருக்கை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, 5 இருக்கை பெற்ற மாடல் விற்பனையில் உள்ளது.

இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள ஹூண்டாய் அல்கசார், எம்ஜி ஹெக்டர் பிளஸ், எக்ஸ்யூவி 700 மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்படலாம்.

7-seater Maruti Suzuki Grand Vitara

டொயோட்டா மற்றும் மாருதி சுசூகி கூட்டணியில் தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய இரு மாடல்களும் 5 இருக்கை பெற்று பிரசத்தி பெற்ற ஹூண்டாய் கிரெட்டா, செல்டோஸ், எலிவேட், உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொளுக்கின்றது.

விற்பனையில் உள்ள கிராண்ட் விட்டாரா காரில் மைல்ட் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷனில் 1.5-லிட்டர், 4 சிலிண்டர் K15C பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 102 hp மற்றும் 137  டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

அடுத்து ஹைப்ரிட் என்ஜின் 78 bhp பவர் 141 Nm டார்க் வழங்கும் மின்சார மோட்டாருடன் 91 bhp மற்றும் 122 Nm டார்க் கொண்o 1.5-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என இரண்டும் இணைந்து செயல்பட்டு அதிகபட்சமாக 115.56 hp பவரை வழங்குகின்றது. இந்த மாடலில் இ-சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

இதே என்ஜின் ஆப்ஷனை பெற உள்ள 7 இருக்கை கிராண்ட் விட்டாரா எஸ்யூவி கார் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம். இந்த மாடலை தவிர மாருதி சுசூகி நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் புதிய ஸ்விஃப்ட் , டிசையர் மற்றும் சில மேம்படுதப்பட்ட மாடல்களுடன் முதன்முறையாக eVX எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை காட்சிப்படுத்தலாம்.

Exit mobile version