வருகின்ற மார்ச் 3 , 2017ல் மாருதியின் பலேனோ ஆர்எஸ் மாடல் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதரன மாடலை விட கூடுதலான பவரை வெளிப்படுத்தும் மாடலாக பலேனோ ஆர்எஸ் விளங்கும்.

பலேனோ ஆர்எஸ்

விற்பனையில் உள்ள மாடலை போன்ற தோற்ற அமைப்பினை பெற்றதாக வரவுள்ள ஆர்எஸ் மாடலில் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்கள் , கூடுதல் வசதிகள் மற்றும் கருப்பு வண்ண இன்டிரியரை பெற்றிருக்கும். பெலினோ ஆர்எஸ் காரின் நீளம் 3,995 மிமீ , அகலம் 1,745 மிமீ மற்றும் உயரம் 1,510 மீமீ மேலும் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையலான இடைவெளி அதாவது வீல்பேஸ் 2,520 மிமீ ஆகும்.

பலேனோ RS 100 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பெற்றிருக்கும். இதன் டார்க் 150 நியூட்டன்மீட்டர் ஆகும்.  பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும்.

நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ள மாருதி பலேனோ RS கார் ஒரே வேரியன்டில் மட்டுமே வரலாம். பை-ஸெனான் தானியங்கி ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் விளக்குகள் , இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , நேவிகேஷன், ஸ்மார்ட்போன் ஆதரவினைபெற்றதாக இருக்கும். பலேனோ RS காரில் முன்பக்க இரண்டு ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் , ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார் போன்ற அம்சங்களும் இடம்பிடித்திருக்கும்.

இந்த காரின் போட்டியாளர்களாக ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி மற்றும் ஃபியட் அபாரத் புன்ட்டோ போன்ற பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் மாடல்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்ள உள்ளது.

மாருதி சுஸூகி பலேனோ ஆர்எஸ் விலை ரூபாய் 8.25 லட்சத்தில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மார்ச் 3, 2017 அன்று அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளது.