மாருதி சுசூகி பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலின் மேனுவல் வேரியண்டில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் நீக்கப்பட்டுள்ளதால் மைலேஜ் 3 கிமீ வரை குறைந்து தற்பொழுது 17.38 Kmpl ஆக உள்ளது. மேலும் சிஎன்ஜி வேரியண்டில் சில பாதுகாப்பு அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிஎன்ஜி வேரியண்டில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (ESP) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (HHA) இரண்டும் நீக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பிரெஸ்ஸா காரில் பின்புற சீட்பெல்ட் ரிமைண்டர் அமைப்பைப் பெறுகிறது
மாருதி பிரெஸ்ஸாவின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 103PS மற்றும் 137Nm டார்க் வழங்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பெறாது. ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் ஆனது கைவிடப்பட்டது. இது பிரெஸ்ஸா மேனுவல் ARAI-சான்றளிக்கப்பட்ட எரிபொருள் திறன் 20.15 kmplலிருந்து 17.38 kmpl ஆக குறைந்துள்ளது.
டாப் வேரியண்ட் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. சன்ரூஃப், 9.0-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் , வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட் உள்ளன.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் விலை ரூ.8.29 லட்சம் முதல் ரூ.13.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…