இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி நிறுவனத்தின் , பிரபலமான செலிரியோ மற்றும் செலிரியோ எக்ஸ் காரில் ஏபிஎஸ் பிரேக் உட்பட இருக்கை பட்டை அணிவதற்கான அறிவிப்பு உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.
மாருதி செலிரியோ காரின் விலை ரூ. 4.31 லட்சம் முதல் ரூ. 5.48 லட்சம் வரையிலான விலையிலும், செலிரியோ எக்ஸ் காரின் விலை தற்போது ரூ. 4.80 லட்சம் முதல் ரூ. 5.57 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாருதி செலிரியோ எக்ஸ் காரின் சிறப்புகள்
வரும் மாதங்களில் அடிப்படை அம்சமாக இணைக்க உத்தரவிடப்பட்டுள்ள இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான சீட் பெல்ட் அணிவதற்கான அறிவிப்பு, ஆகியவற்றுடன் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், மற்றும் ஓட்டுநருக்கான காற்றுப்பை போன்றவை நிரந்தர அம்சமாக இரு மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
செலிரியோவின் இரு மாடல்களிலும் பொதுவாக 68 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் என்ஜின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு தேர்வுகளில் கிடைக்கின்றது.
சமீபத்தில், இந்நிறுவனம் 35 ஆண்டுகால மாருதி ஆம்னி வேன் மாடலின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதற்கு மாற்றாக சமீபத்தில் மாருதி ஈக்கோ வேனில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை வழங்கியிருந்தது.