Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

13 வருட நம்பர் 1 இடத்தை இழந்த ஆல்டோ, கைப்பற்றிய மாருதி சுஸூகி டிசையர்

by MR.Durai
7 January 2019, 6:44 pm
in Car News
0
ShareTweetSend

2ebd1 maruti suzuki dzire

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2018 ஆம் வருட முடிவில் 13 ஆண்டுகால விற்பனையில் முதன்மையான கார் என்ற பெருமையை மாருதி ஆல்ட்டோ இழந்து விட்டது. முதன்முறையாக மாருதி சுஸூகி டிசையர் கார் முதன்மையான இடத்தை கைப்பற்றியுள்ளது.

மாருதி சுஸூகி டிசையர்

இந்திய மோட்டார் சந்தையில் பயணிகள் வாகன பிரிவில் மாருதி சுஸூகி நிறுவனம் முதன்மையான இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. குறைந்த விலை, அதிக மைலேஜ் மற்றும் சிறந்த சர்வீஸ் என தன்னை மாருதி சுஸூகி நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

சமீபத்தில் வெளியான புதிய தலைமுறை மாருதி சுஸூகி டிசையர் காரின் வருகைக்குப் பின்னர் ஆல்டோ விற்பனை கடுமையாக பாதிக்க தொடங்கியது. குறிப்பாக தொடக்க நிலை சந்தையில் ரெனோ க்விட், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் டாடா டியாகோ போன்ற மாடல்களுக்கு கிடைக்க தொடங்கிய அபரிதமான வரவேற்பு போன்ற காரணங்களுடன் புதுப்பிக்கப்படாத மாருதி ஆல்டோ போன்ற காரணங்களால் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2677f maruti alto 800

இந்நிலையில் வெளியாகியிருந்த புதுப்பிக்கப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் டிசையர், செடான் ரக பிரிவில் இந்திய குடும்பங்களின் அதிகரித்து வரும் வருமானம் மாறி வரும் சந்தையின் சந்தையின் சூழல் காரணமாக ஆல்டோ காரை விட மக்கள் செடான் ரக டிசையரை விரும்ப தொடங்கியுள்ளனர்.

ஆனால் 2018 ஆம் ஆண்டில் ஆல்டோ காரின் விற்பனை பெருமளவில் வளர்ச்சி பெறாமல் 0.42 சதவீத சரிவை கண்டு எண்ணிக்கை 256,661 ஆக பதிவு செய்துள்ளது. ஆனால் முந்தைய 2017 ஆம் வருடத்தில் 2,57,732 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது.

புதிதாக நெம்பர் 1 இடத்தை கைப்பற்றியுள்ள மாருதி டிசையர் கார், 2018 ஆம் ஆண்டில் 17.58 சதவீதம் வளர்ச்சி பெற்று 2,64,612 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. இதே காலக்கடத்தில் முந்தைய வருடத்தில் சுமார் 2,25,043 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது.

மாருதி டிசையர் கார் விற்பனையின் மொத்த பங்களிப்பில் டாப் வேரியன்ட் 25 சதவீதம் பங்களிப்பை பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியன்ட் பங்களிப்பு 20 சதவீதமாக உள்ளது.

7c509 maruti alto k10

டிசையர் கார் எஞ்சின் விபரம்

1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் பெட்ரோல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22 கிலோமீட்டர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் டீசல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.40 கிலோமீட்டர் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக டிசையர் மாறியுள்ளது.

மாருதி சுஸூகி டிசையர் கார் விலை ரூ.5.60 லட்சம் முதல் ரூ. 9.45 லட்சத்தில் அமைந்திருக்கின்றது.

For more news from car and bike news in Tamil, follow us on Twitter @automobiletamilan and on Facebook at facebook.com/automobiletamilan

Related Motor News

21,494 மாருதி டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுசுகி

Tags: Maruti Dzire
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

அடுத்த செய்திகள்

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan