மாருதி சுசூகி நிறுவனம் சிஎன்ஜி பொருத்தப்பட்ட ஃபிரான்க்ஸ் மாடலை ₹ 8.42 லட்சம் ஆரம்ப விலை முதல் ₹ 9.27 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிஎன்ஜி பெறுகின்ற மாருதி நிறுவனத்தின் 15வது மாடலாக ஃபிரான்க்ஸ் விளங்குகின்றது.
பெட்ரோல் காரை விட ரூ.95,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ள பிரான்க்ஸ் மாடலில் சிஎன்ஜி பயன்முறையில் சிக்மா மற்றும் டெல்டா என இருவிதமான வேரியண்டுகள் கிடைக்கின்றது.
Maruti Suzuki Fronx
ஃபிரான்க்ஸ் காரில் இடம்பெற்றுள்ள என்ஜின் ஆப்ஷன் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டையும் பெறுகின்றது.
அதிக்கப்படியான பவரை வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறுகின்றது.
தற்பொழுது வந்துள்ள சிஎன்ஜி வேரியண்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை அடிப்படையாக கொண்டு 77.5hp பவர் மற்றும் 98.5Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே பெற்றுள்ளது.
மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் சிஎன்ஜி மைலேஜ் 28.51km/kg ஆகும்.
தோற்ற அமைப்பு, இன்டிரியர் வசதிகள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை. விற்பனையில் உள்ள பெட்ரோல் காரை போலவே அமைந்திருக்கின்றது.
Fronx Sigma CNG – ₹ 8.42 லட்சம்
Fronx Delta CNG – ₹ 9.28 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)