மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து 6 ஏர்பேக்குகளை பெற்ற 2025 ஃபிரான்க்ஸ் காரை விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில் விலையை 0.5 % வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே புதிய மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் விலை ரூ.7.59 லட்சம் முதல் ரூ.13.14 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கலாம்.
முன்பாக இந்நிறுவனம் எர்டிகா, பலேனோ, XL6 என மூன்று கார்களை சில நாட்களுக்கு முன் 6 காற்றுப்பைகளை பெற்றதாக வெளியிட்டிருந்தது. தற்பொழுது இக்னிஸ் மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ என இரு மாடல்கள் மட்டுமே 6 ஏர்பேக்குகளை பெறவில்லை, இந்த மாடல்களும் விரைவில் பெறக்கூடும்.
மற்ற பாதுகாப்பு சார்ந்தவற்றில் ESC, அனைத்து இருக்கைகளுக்கும் ரிமைண்டருடன் கூடிய 3-புள்ளி இருக்கை பெல்ட்கள் மற்றும் பிரேக்-அசிஸ்ட், டயர்-அழுத்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவை உள்ளது.
ஃபிரான்க்ஸ் காரில் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டையும் பெறுகின்றது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனும் உள்ளது.
அதிக்கப்படியான பவரை வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஃபிரான்க்ஸின் மூலம் மிக விரைவாக 1,00,000 ஏற்றுமதி இலக்கை 25 மாதங்களில் கடந்த பெருமையை இந்த கார் சமீபத்தில் பெற்று ஜப்பானில் 69,000 கார்களும் மற்ற 79 நாடுகளில் மீதமுள்ள எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.