தயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் ஒன்று தொடங்கியுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை வழங்கும் நோக்கிலும், தயாரிப்பு குறைபாடுகளை குறைக்கும் நோக்கிலும் DOJO பயிற்சி மையம் ஒன்றை, தங்கள் தொழிற்சாலையில் உனோ மிண்டா நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2016ம் ஆண்டில் மாருதி சுசூகி நிறுவனம் உருவாக்கியது.
இதுவரை, இந்த மையம், டயர் II சப்ளையர்கள் மற்றும் டயர் ஒன் சப்ளையர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறது. DOJO என்பது மூன்று முக்கிய விஷயங்களை கொண்டிருக்கும். அவை, பாதுகாப்பு, தரம் மற்றும் பயிற்சி அலல்து திறன் மற்றும் உற்பத்தி திறன் போன்றவைகளாகும். DOJO என்பது பணி செய்ய வழி செய்யும் இடம் பொருளாகும். DOJO மையங்கள் ஊழியர்களின் திறனை அதிகரிக்கவும், பயிற்சி அளிக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக தயாரிப்பு ஆலைகளுக்கு புதிய ஒர்க்போர்சை தயார் செய்வதாக இருக்கும்.
இந்த DOJO மையங்கள், ஊழியர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி அளித்து, தொடர்ச்சியாக ஒரே மாடலில் தொடர்ச்சியாக செய்ய உதவும். இந்த அனுபவத்தால், பயிற்சி பெறுபவர்கள், புதிய நம்பிக்கை பெற்று தங்கள் பணியை ஒவ்வொரு முறையும் சரியாக செய்வார்கள். இந்த பயிற்சி ஷாப் ப்ளோர்களில் மட்டுமின்றி பல இடங்களில் அளிக்கப்படும். பொதுவாக இங்கு புதிய ஊழியர்கள் 9-10 நாட்கள் பயிற்சி பெறுவார்கள்
இந்த பயிற்சியின் முடிவில் மதிப்பீட்டு சோதனையும் நடத்தப்படும். இதில் தகுதி பெறும் ஊழியர்கள் மட்டுமே ஷாப் ப்ளோருக்கு அனுப்பப்படுவார்கள். இதில் தயாரிப்பு கான்செப்ட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். DOJO மையத்தில் தியரி பாடங்களும் இடம் பெறும். இவை தயாரிப்பு மட்டுமின்றி நிறுவனம் தொடர்புடையதாகவும் இருக்கும். இதன் மூலம் நிறுவனத்துடன் ஊழியர்கள் எப்படி தொடர்ப்பு வைத்து கொள்வது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமே OJT ஆன்-ஜாப் டிரைனிங் என்பதேயாகும்.