இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 35 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி ஆம்னி வேன் உற்பத்தி நிறுத்தப்படுள்ளது. ஆம்னிக்கு மாற்றாக மாருதி ஈக்கோ தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது.
மாருதி சுசூகி ஆம்னி
1984-ம் ஆண்டில் உற்பத்தி தொடங்கப்பட்ட மாருதி ஆம்னி கார் தொடர்ந்து இந்திய சந்தையில் 5 இருக்கை, 8 இருக்கை , சரக்கு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வேரியன்டில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், விரைவில் பாதுகாப்பு தர மதிப்பீடுகள் சார்ந்த பாரத் கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ற கார்கள் மட்டும் இந்திய சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
இந்திய சாலைகளில் மிகவும் பரவலாக காணப்படுகின்ற பிரசத்தி பெற்ற ஆம்னி காரில் 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து 35 பிஎஸ் ஆற்றல் மற்றும் 59 என்எம் டார்க் வழங்குகின்ற 800சிசி என்ஜின் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. தற்போது சிஎன்ஜி-பெட்ரோல் மற்றும் எல்பிஜி-பெட்ரோல் என விற்பனைக்கு கிடைத்து வந்தது.
ஜூலை 1,2019 முதல் விற்பனை செய்யப்படுகின்ற கார்களில் டிரைவர் ஏர்பேக், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ஓட்டுனர் மற்றும் உடன் பயணிக்கோருக்கு சிட் பெல்ட் ஆகியவை இணைப்பது கட்டாயமாகும். ஏப்ரல் 1,2020 முதல் பிஎஸ் 6 மற்றும் பாதுகாப்பு தர மதிப்பீடுகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மாருதி சுசூகி மாதந்திர விற்பனையில் தொடர்ந்து 6,000 கார்களுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஆம்னி நிறுத்தப்படுவதனால், இந்த காருக்கு மாற்றாக விற்பனையில் உள்ள மாருதி ஈக்கோ கார் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை பெற்ற மாடலாக விற்பனைக்கு வரவுள்ளது.
ஆம்னி காரை விட ரூ.70,000 கூடுதலான விலையில் ஈக்கோ காரின் தொடக்க வேரியன்ட் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆம்னிக்கு மாற்றாக மாருதி ஈக்கோ அமையுமா ?